வெல்த் கம்பெனி மியூச்சுவல் பண்ட் சார்பில் புதிய நிதி திட்டம் அறிமுகம்

வெல்த் கம்பெனி மியூச்சுவல் பண்ட் சார்பில் புதிய நிதி திட்டம் அறிமுகம்



பாண்டோமத் நிதி சேவைகள் குழுமத்தின் கீழ் வேகமாக வளர்ந்து வரும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான வெல்த் கம்பெனி அசெட் மேனேஜ்மென்ட் ஹோல்டிங்ஸ், புதிய மல்டி அசெட் வகை நிதியான ‘தி வெல்த் கம்பெனி மல்டி அசெட் அலோகேஷன் பண்ட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


பங்கு, கடன், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சொத்து வகைகளை ஒருங்கிணைத்து, நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு செல்வ வளத்தைக் கட்டியெழுப்புவதுதான் இந்த நிதியின் முதன்மை நோக்கம். புதிய நிதி சலுகை (என்எப்ஓ) நவம்பர் 19 முதல் டிசம்பர் 3 வரை திறந்திருக்கும்.


சந்தை நிலைமைகள் மாறும்போது, சொத்து ஒதுக்கீட்டை தானாக மாற்றிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மை இந்த நிதிக்கு முக்கிய அம்சமாகும். மேலும், 50% வரை பொருட்களிலான முதலீட்டு திறன் இந்த நிதியை துறையில் தனித்தன்மையுடன் நிலைப்படுத்துகிறது. வருமான வரிச் சட்டத்தின் கீழ் கலப்பு வகை வரி நன்மைகளைத் தக்கவைத்தபடி, இந்திய சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப ஆபத்து–சமநிலை செய்யப்பட்ட வருமானத்தை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


என்எப்ஓ அறிமுகத்தைப் பற்றி தி வெல்த் கம்பெனி மியூச்சுவல் பண்ட் சிஐஓ ஈக்விட்டி அபர்ணா ஷங்கர் கூறும்போது,


“இந்தியர்களின் பாரம்பரிய சேமிப்பு நடைமுறையை பிரதிபலிக்கும் தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற சொத்துகளுடன், பங்கு மற்றும் கடன் போன்ற நவீன முதலீட்டு கருவிகளை இணைத்து, நீண்டகால செல்வ வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.


அதேபோல் சிஐஓ கடன் உமேஷ் சர்மா தெரிவித்ததாவது:


“சந்தை சுழற்சிகளை திறம்பட கடக்கும் வகையில், உண்மையான பல்வகைப்படுத்தலுடன் நீண்டகால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை இணைக்கும் ஒரு முழுமையான நிதியை உருவாக்குவதே எங்களின் நோக்கம்,” என்றார்.


இவ்விரு சிஐஓக்களும், இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை முன்னிட்டு அமைக்கப் பட்ட “பாரதத்தை கட்டமைக்கும் நிலைத்தன்மை” என்ற ஏஎம்சி நோக்கத்தைக் கோடிட்டுக்காட்டினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%