செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் திருக்குடை வழங்கும் நிகழ்ச்சி!
Nov 23 2025
77
வேலூர், நவ.24-
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் தீப ஆராதனை நடந்தது. இதையடுத்து திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருக்குடை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்பு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேள வாத்தியங்கள் முழங்க இந்த திருக்குடை ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%