வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை 21-ம் ஆண்டு விழா: நடிகர் வெங்கட்பிரபு, நடிகை மிருணாளினி ரவி பங்கேற்பு

வேலூர், அக்.6–
வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துமனையின் 21 வது ஆண்டு விழாவுடன் உலக இதய தினத்தை மருத்துவமனை குழுமம் சிறப்பாக கொண்டாடியது. இந்த சிறப்பான விழாவை நடிகரும் இயக்குனருமான வெங்கட்பிரபு மற்றும் நடிகை மிருணாளினி ரவி குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தனர்.
ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா தோற்றி வைத்த நாராயணி மருத்துவமனையின் 21-வது ஆண்டு விழா, உலக இதய தினத்தோடு கொண்டாடப்பட்டது. இவ்விழா நாராயணி மகால் அரங்கில் இம் மருத்துவமனையின் இயக்குனர் என்.பாலாஜி தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இயக்குனர் என். பாலாஜி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், இயக்குனருமான வெங்கட்பிரபு, மற்றும் திரைப்பட நடிகை மிருணாளினி ரவி பங்கேற்று குத்து விளக்கேற்றி தொடக்கிவைத்து சிறப்புறையாற்றினர்.
வெங்கட்பிரபு பேசியதாவது.
ஸ்ரீ நாராயணி மருத்துவமனையை ஸ்ரீசக்தி அம்மா தோற்றி வைத்து மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. மருத்துவ சிகச்சைகளை வெற்றிகண்டு21- ஆம் ஆண்டு விழாவை இதய தினவிழாவில் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி. இம்மருத்துவமனை சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது பாராட்டுக்கு உட்பட்டது. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். இதற்காக நாம் மருத்துவமனைக்கு வந்து சோதித்து மருத்துவர்கள் சொல்படி நடந்து கொண்டால் நம்மை நோய் நாடாது. இத்துடன் எல்லோரும் முறையான நடை பயிற்சி, யோக பயிற்சிகளை செய்து, உடலை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். சரியான உணவுகளை தேர்வு செய்து உண்ண வேண்டும். இறுதியாக மனநிறைவுடன் ஆரோக்கியமாக வாழ்ந்திட பழகி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில், மருத்துவமனை டீன், சூப்பெரண்ட் மற்றும் அனைத்து பிரிவு டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?