
பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் ஓம் பரிபூரணம் ஸ்ரீலஸ்ரீ கோடீஸ்வர சுவாமிகள் 31ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ
இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் உள்ள தியான மண்டபத்தில் 11- ந்தேதி சனிக்கிழமை காலை 11- மணிக்கு ஓம் பரிபூரணம் ஸ்ரீலஸ்ரீ கோடீஸ்வர சுவாமிகள் 31ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை பாடகச்சேரி ஸ்ரீ ல ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அன்னதானம் அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?