ஸ்ரீவாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் அஷ்டபந்தனம் சா ற்றுதல், ஸ்ரீ சத்திய நாராயண பூஜை..........

கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் அமைந்திருக்கும் அக்டோபர்-7 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அஷ்டபந்தனம் சாற்றுதல், பௌர்ணமி கலச பூஜை, ஹோமங்கள், அஷ்டபந்தனை சாற்றுதலும் நடைபெற்றது. திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் வேத ஹோமங்கள், பூர்ணாஹீதியும் 7.15 மணிக்குள் அம்பாளுக்கு தீர்த்த கலசாபிஷேகம், ஸ்ரீ சத்யநாராயணா பூஜை,9.15 மணிக்கு மஹா தீபாராதனையும் நடைபெற்றது. ஐந்து கதை சிரவணம் செய்து நமது வைஸ்ய தம்பதிகள் அனைவரும் பூஜை செய்து உத்தியாவனம் ஆச்சார்யாள் ஸ்வாமிக்கு அளித்து மதியம் 1:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. ஆகிய இரண்டு நாட்களும் வெகு சிறப்பாக பூஜைகளும் நடைபெற்றது. மக்கள் அம்பாளின் அனுகிரஹத்தையும், ஸ்ரீ சத்யநாராயணரையும் வேண்டி அருள் பெற்றனர். இவ்விழாவை ஏற்பாடு செய்தவர்கள் ஆர்ய வைஸ்ய சமாஜம் புவனகிரி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?