அன்புடையீர்
வணக்கம். 7.10.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரின் முதல் பக்கத்தில் நவம்பர் 6, 11ம் தேதிகளில் வாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்ற அரசியலை மிக அழகாக பீகார் பற்றி சொன்னது பாராட்டுக்குரியது.இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான நாளாக அமைய எனக்கு உதவி செய்தது.
திருக்குறளை அதன் பொருளுடன் 402 நாட்களாக படித்து மகிழ உதவும் தமிழ்நாடு பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஸ்ரீ பார்த்தசாரதி பௌர்ணமி புறப்பாடு வடமம் செய்து மிகவும் அருமை பாராட்டுக்கள்.
சப்பாத்தி நம் உடல் எடையை குறைக்கும் என்று தெரியும். ஆனால் அதில் உள்ள நிபந்தனைகளை எப்படி கையாள வேண்டும் என்று மிக அருமையான செய்தியை நலம் தரும் மருத்துவம் பகுதியில் படித்து தெரிந்து கொண்டேன். பாராட்டுக்கள் நடுக்கடலில் இரண்டு இடங்களில் நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
வரலாறு காணாத உச்சத்தை தங்கம் அடைந்தது என்றும் 87,000/- க்கு விற்பனை செய்யப்படுகிறது செய்தி அதிர்ச்சியாகவும் திருமணம் செய்ய காத்திருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு வேதனையான செய்தியாக இருக்கும் என்று உணர்ந்து படித்தேன் .
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் சுசேதா திருப்பளானி வரலாறு அவரைப் பற்றிய தகவலும் மிகவும் அருமை.
பல்சுவைக் களஞ்சியம் பகுதியில் வந்த அரிசி தேங்காய் பால் பாயாசம் படிக்கும் போதே நாவில் எச்சில் ஊறியது மீம்ஸ் மிகவும் அருமை. பாராட்டுக்கள். சமையலறை ஸ்பெஷல் என்று மிக அருமையான தகவல்களை சொல்லி சமையலறையில் உற்சாகமாக வேலை செய்ய உதவும் தமிழ்நாடு பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
மயிலை ஆதிகேசவன் பெருமாள் என்ற படமும் அதைப்பற்றி தகவலும் மிகவும் அருமை திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் என்ற செய்தியும் மிகவும் அருமை பாராட்டுக்கள்.
சுற்றுலா பக்கத்தில் வந்த இரவே இல்லாத நாடு தலைநகரம் இல்லாத குடியரசு ஒரு பார்வை என்று நல்ல அருமையான தகவல்களை கொடுத்து சுற்றுலா செல்பவர்களுக்கு உற்சாகமாக தங்களுடைய பயணம் அமைய உதவும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
தொழில்நுட்ப அறிவியல் செய்திகள் என்ற தலைப்பில் ஒரு வலைத்தளத்தில் குக்கீகளை ஏற்கலாமா? நிராகரிக்கலாமா என்ற அருமையான தகவலை சொன்னது அறிவுக்கு விருந்தாக அமைந்தது.
நவம்பர் 15ஆம் தேதி முதல் ஒரு புதிய மாற்றம் சுங்கச்சாவடி கட்டணம் யு பி ஐ மூலம் செலுத்தினால் கால்பந்து கூடுதல் கட்டணம் என்ற செய்தி எல்லாம் அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக் கொலை என்ற செய்தி பயங்கரமாக அங்கு நடக்கும் தகவலை படிக்க வைத்தது.
அனைத்து பக்கங்களிலும் அருமையான தகவல்களை மிக அழகாக தொகுத்துக் கொடுக்கும் தலையாயப் பணியை செய்யும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்