வாசகர் கடிதம் (P. கணபதி) 07.10.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 07.10.25


===============

அன்பான வாசக சொந்தங்களுக்கு இதய வணக்கங்கள். 


மக்களே போலும் கயவர் என்ற வள்ளுவனின் வரையறைக்கு உதாரணம் நானே என்று காட்டியுள்ளார் ராகேஷ் கிஷோர் என்ற வழக்குரைஞர். அவர் வழக்கறிஞர் அல்ல. கருத்துக்களை வீசி வாதிட வேண்டிய களத்தில் செருப்பு வீசியுள்ளார். இந்திய சமூகமே விரும்பாத செயல் என்று பிரதமர் அழகாக கண்டித்துள்ளார். அதே சமயம் தன்னடக்கத்தை வெளியிட்ட தலைமை நீதிபதி பி. ஆர்.கவாய் அவர்களும் பாராட்டற்குரியவரே. 


சிந்திக்க ஒரு நொடி வரிகளாக திருமதி. உஷா முத்துராமன் அவர்களின் குண்டூசி குத்தல் உதாரணம் சிக்கனத்தின் அருமையை உசுப்பிவிடுவதாக உள்ளது. Good. 


பட்டாசுக் கடை மற்றும் ஆலைகளின் விபத்துச் செய்தியும், கடலில் மீனவர்களுக்கு நேரும் கொடுமைச் செய்திகளும் தமிழகத்தின் சாபக்கேடாக அமைந்துள்ளன. இந்த துயரங்களை முற்றிலுமாக, நிரந்ந்தரமாக அகற்ற அரசுகள் செயல்படுவது மக்கள் நல அரசின் கடமை. 


வங்கி மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் ரூபாய் 1.84 லட்சம் கோடியை உரியவர்களிடம் சேர்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு துவக்கியிருப்பது வரவேற்கத் தக்கது. 


பாக். ராணுவ அமைச்சரின் அடாவடிப் பேச்சு ஒரு அரசு ஆளுமைக்கு அழகல்ல. போரில்லா உலகம் படைக்க எல்லோரும் போராடி வரும் இந்தச் சமயத்தில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது மாதிரியான பேச்சு இது. இது போருக்கான காலமல்ல என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். 


அரிசி தேங்காய் பாலில் செய்தால் பாயாசம் வருமா அல்லது (தலைப்பில் உள்ள) "பாயிசம்" வருமா தெரியவில்லை. 


சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத 13 டிப்ஸ், சமயலறை சுத்தம், கையாளுதல் குறித்த ஆலோசனைகள் எல்லாமே பயன் மிக்கவை தாம். 


சுற்றுலா பகுதியில் வந்துள்ள உலகில் உள்ள சில நாடுகளின் வினோதங்கள் பற்றிய தகவல் தொகுப்பு மிக அருமை. அனைவரும் தெரிந்து கொள்ளத் தகுந்த செய்திகள். தமிழ்நாடு இ இதழ் குழுமத்தார்க்கு தேங்க்ஸ். 


க்ரைம் கார்னரில் வாசித்த ஓ ஜி கஞ்சா என்பது என்னவென்று புரிய வில்லை. Ocean Grown அல்லது Original Gangster என்பதன் சுருக்கம் என்பதை கூகுளின் வழி தெரிந்து கொண்டேன். என் vocabulary strength ல் மேலும் ஒரு அடிஷன். நன்றி. 


எனது படைப்பு ஒன்று இன்று வெளிவந்துள்ளது. இ இதழ் குழுமத்தார்க்கு நன்றி. 


மீண்டும் நாளை சந்திப்போம். 


P. கணபதி

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%