
.. திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர் -7 கீழ்பென்னாத்தூர் வட்டம் கல்பூண்டி ஊராட்சியில் அமைந்திருக்கும் வெட்காளியம்மனுக்கும், வக்ரகாளியம்மனுக்கும் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ சந்துரு சாமி அவர்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், சந்தனக் காப்பில் அலங்காரம், யாக வேள்வி தீபாராதனையும் நடைபெற்றது. கடன்புறப்பாடு, மற்றும் பரதநாட்டியம் இளம் சிறுமங்கை சாருலதா,ஹேமலதா நடத்தினார்கள். மற்றும் சொற்பொழிவாளர் உதய ராணி அவர்களால் சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் தீபாராதனையும் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வெட்காளியம்மனையும், வக்ர காளியம்மனையும் வேண்டி அருள் பெற்றனர் . தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?