ஹாக்கி இந்தியா லீக் 7-வது சீசன்: லியாம் ஹென்டர்சன் ரூ.42 லட்சத்துக்கு ஏலம்

ஹாக்கி இந்தியா லீக் 7-வது சீசன்: லியாம் ஹென்டர்சன் ரூ.42 லட்சத்துக்கு ஏலம்

புதுடெல்லி:

ஹாக்கி இந்​தியா லீக்​கின் 7-வது சீசன் ஆடவர் போட்​டிக்​கான மினி வீரர்​கள் ஏலம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் வேதாந்தா கலிங்கா லான்​சர்ஸ் அணி ஆஸ்​திரேலி​யாவை சேர்ந்த டிபன்​ட​ரான லியாம் ஹென்​டர்​சனை ரூ.42 லட்​சத்​துக்கு ஏலம் எடுத்​தது. நெதர்​லாந்தை சேர்ந்த டிபன்​ட​ரான சாண்​டர் டி விஜ்ன்-ஐ தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி ரூ.36 லட்​சத்​துக்கு வாங்​கியது.


யுபி ருத்​ராஸ் அணி வில​கியதை தொடர்ந்து அந்த அணியை ஹாக்கி இந்​தியா லீக்​கின் ஆட்​சிமன்​றக்​குழு நிர்​வகிக்​கிறது. அந்த அணிக்​காக ஜெர்​மனியை சேர்ந்த தீஸ் பிரின்ஸ் ரூ.36 லட்​சத்​துக்கு ஏலம் எடுக்​கப்​பட்​டார். இந்​திய வீரர்​களில் இளம் கோல்​கீப்​ப​ரான விவேக் லக்​ராவை ரூ.23 லட்​சத்​துக்கு ஷ்ராச்சி ரார் பெங்​கால் டைகர்ஸ் ஏலம் எடுத்​தது.


யு-21 அணி​யின் நடுகள வீர​ரான அட்​ரோஹித் ஏக்​காவை ரூ.11 லட்​சத்​துக்கு தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி வாங்​கியது. 14 வயதான கேதன் குஷ்​வாஹாவை ரூ.2.5 லட்​சத்​துக்கு பெங்​கால் டைகர்ஸ் அணி​யும், சீனியர் வீர​ரான ரூபிந்​தர் பால் சிங்கை ரூ.12 லட்​சத்​துககு எஸ்ஜி பைப்​பர்​ஸ் அணியும் ஏலம் எடுத்தன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%