*இசைப் போட்டியில் பதக்கம்: புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பாராட்டு*
Jan 02 2026
13
வந்தவாசி, ஜன 03:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி நந்தனா சென்னையில் உள்ள அரசு பொது நூலகத்தில் 8 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கான மாநில அளவிலான இசை போட்டியில் பங்கேற்று, அறிவியலும் தமிழும் என்ற தலைப்பில் பாடலை பாடி, சிறப்பிடம் பெற்றார். மேலும் அவருக்கு ரொக்க பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பதக்கம் பெற்று பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவியை புதுவை தமிழ் சங்கத் தலைவரும், தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி நிறுவனருமான கலைமாமணி முனைவர் வி.முத்து மாணவியை பாராட்டி, சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், திமுக நிர்வாகிகள் கோபிநாதன், சிவராமன், தெள்ளார் கணினி ஆசிரியர் பா.சுரேஷ், இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குனர்கள் டிகேஜி ஆனந்த், டிடி. ராதா, அருள்முருகன், அதிமுக நிர்வாகி கன்னியப்பன், பாமக நிர்வாகி வெங்கடேசன், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?