
வந்தவாசி , அக் 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளியில் திருக்குறளை வாசிப்போம்..! உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ப.சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப. குப்பன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் திருக்குறளை வாசிப்போம்; மனிதத்தை நேசிப்போம் என்று வலியுறுத்தினார். மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாவட்ட நிர்வாகம் சார்பில் 1330 திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 15,000 ரூபாய் வழங்குகிறது என்று கூறினார். நிகழ்ச்சியில் திருவள்ளுவர் வேடமிட்டு திருக்குறள் வாசித்த மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்படுகின்றன என்று கூறினார். பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பாக்ய லட்சுமி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியை த.முல்லை நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?