
வந்தவாசி, அக் 12:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா மைய வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ம.ரகுபாரதி, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் ஜி.விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ஜா. தமீம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சாந்தி பங்கேற்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களையும், பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கி கூறினார் மேலும் செல்போன் பயன்பாட்டால் தான் அதிக பெண் குழந்தைகள் பாதிப்பு அடைவதாக வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் காவலர் நந்தினி, ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் மைய நிர்வாகி கு.சதானந்தன், இயக்குனர் ஆதிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் இறுதியில் ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?