*தெய்யார் கிராமத்தில் 5 பெருமாள் சங்கமித்த பஞ்ச கருடசேவை வைபவம்...!*

*தெய்யார் கிராமத்தில் 5 பெருமாள் சங்கமித்த பஞ்ச கருடசேவை வைபவம்...!*



வந்தவாசி, அக் 13:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் அஹோபில மட ஆதினத்திற்கு உட்பட்ட கோவில்களின் சார்பில் பஞ்ச கருடசேவை வைபவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் தெய்யார், நல்லூர், சோகத்தூர், பாப்பநல்லூர், மூடுர் ஆகிய கிராமங்களில் உள்ள 5 பெருமாள்கள் இங்கே கருட வாகனத்தில் எழுந்தருளி மேளதாளத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பால், தயிர், வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை சேர்ந்த அன்ன கூட உற்சவம் நடந்தேறியது. இந்த வைபவத்தில் வெளியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%