*பட்டாசுகளை வெடிக்கும்போது குழந்தைகளை கண்காணியுங்கள்: தீயணைப்பு அலுவலர் பேச்சு*

*பட்டாசுகளை வெடிக்கும்போது குழந்தைகளை கண்காணியுங்கள்: தீயணைப்பு அலுவலர் பேச்சு*


வந்தவாசி, அக் 19:


வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கான "விபத்தில்லா தீபாவளி" செயலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். ஜவகர் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பெ.பார்த்திபன், முதுகலை ஆசிரியர் ல.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி தீயணைப்புதுறை சிறப்பு அலுவலர் மு. பிரபாகரன் பங்கேற்று, தீபாவளி அன்று பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் என்பது பற்றியும், பட்டாசுக்களை குழந்தைகள் தனியாக வெடிக்காமல் பெற்றோர் துணையுடன் பாதுகாப்பாக வெடிக்கவும் அறிவுறுத்தினார். மேலும் திறந்த வெளிப் பகுதிகளில் மட்டுமே பட்டாசு வெடித்து கையாள வேண்டும் என்று சொல்லி, பட்டாசு மாதிரிகளை கையில் பிடித்து அதன் செயல்பாடுகளை மாணவர்களிடம் விளக்கினார். மேலும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர் ஜி.தட்சணாமூர்த்தி கருத்துரை வழங்கினார். இறுதியில் ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் மைய முதல்வர் கு.சதானந்தன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%