"பொன் மகள் வந்தாள்"

"பொன் மகள் வந்தாள்"



கருவான நாள் கண்ணே!,உனை உறுதி செய்ய,


சிறுமொட்டு போல் உள்ளே 

உயிருணர்ந்து,


விரிகின்ற திரையில், மருத்துவம் உனை வெளிச்சமிட்டுக் காட்ட,


இருதயத்தின் ஓசைகள் இசையாக அவளுக்குப் புரிந்த தருணம், 


 சிலிர்த்துக் கொண்டதே புறமும் அகமும்!


கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் வளர்ந்த கண்மணி!


பிள்ளையோ பெண்ணோ, இன்னு யிரின் நீட்சி நீ! 


இருப்பை உணர்த்த வயிற்றில் உதைக்கிறாய், வளையவே வந்து மெல்ல கிசு கிசுக்கிறாய்!


பிரிதோர் நன்னாளில் பெற்றவளுக்கு மறு ஜென்மம் தந்து,


உற்றவள் நீ, மடியில் விழுந்தாய்!

கையில் உனைக் கொண்ட நாளில்,


கண் விழித்து, கருத்தாய் வளர்த்து 

பெண்ணாய் பெற்ற பேரின்பம் தந்தாய், 


இன்னுயிரே, பொன்மகளே!

நீ, இன்று போல் என்றும் நன்றே வாழ்க! நலமே சூழ்க!!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%