ஒரு முகம்
இருமுகமென்று
எனக்கென்று
எந்த முகங்களுமில்லை
உன்னைத் தவிர.
இஷ்டப்படுவதற்கும் -என்னோடு
கஷ்டப்படுவதற்கும் -நான்
நஷ்டப்படுவதற்கும்
உன்னை விட்டால்
இவ்வுலகில் வேறு யாரடி ?!
உன் மீது என்ன பிரியமோ
நீராடும் போது
உன்னை அள்ளி பூசிக் கொண்டது
அந்த மஞ்சள் .
நீ வைக்கும் போது மட்டும் தான்
அந்த கல்நெஞ்சுக்காரி
மருதாணி காதலோடு சிவக்கிறது
மனிதப்பிறவி எடுத்தால்
அந்த பிரம்மன் கூட
கண் வைத்து விடுவானடி !
உன் அம்மாவிடம் சொல்லி
கண்ணுக்கு இடும் மையை
உன் கன்னத்திலும் கொஞ்சமிடு
கண் திருஷ்டி
வழி மாறி போகட்டும்
நீ பிங்க் சாரி உடுத்தும் போதெல்லாம்
பார்பி டாலாக மாறி போகிறாய்
உலக அதிசயமாய்
உன்னை பற்றி
கவிதை எழுதலாம் என்று
நினைக்கும் போதெல்லாம்
உன் கண் வீச்சில்
நிலைகுலைந்து போகிறேனடி
என்ன செய்ய ?
ஏது செய்ய ?
ஒரே ஒரு நிமிடம்
என் கனவிலும் ,கண்ணிலும் வராதே
கொஞ்சமாய்
கொஞ்சும்
காதல் கவிதையை
கால் பக்கத்திற்காவது
எழுதி விட்டு போகிறேன்
நௌஷாத் கான் .லி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?