10 ஆயிரம் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்கும் வகையில் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

10 ஆயிரம் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்கும் வகையில் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்


* நவம்பர் அல்லது டிசம்பரில் நடைபெறும் * 25 சன்மார்க்கிகளுக்கு பட்டயம்


சென்னை, அக்.5–


வருகின்ற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் 10 ஆயிரம் சன்மார்க்க அன்பர்கள் (குறிப்பாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள்) பங்கேற்கும் வகையில் சென்னையில் வள்ளலார் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


அம்மாநாட்டில் வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கின்ற 25 சன்மார்க்கிகளுக்கு பட்டயம் வழங்கி சிறப்பு செய்திடவும், வள்ளலார் குறித்த நூலும் வெளியிடப்படவும் உள்ளது. இப்படி அனைத்து வகைகளிலும் வள்ளலாரின் அறநெறிகளை பாதுகாக்கும் அரசாக திராவிட மாடல்அரசு திகழ்கிறது என்றார் அவர்.


முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று கடலூர் மாவட்டம், வடலூர், திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெற்ற அருட்பிரகாச வள்ளலாரின் 203-–ம் வருவிக்க உற்றநாள் விழாவில் கலந்து கொண்டு, சன்மார்க்க கொடியினை ஏற்றி வைத்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். பின்னர், வள்ளலார் சர்வதேச மைய “பி” பிரிவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–


வள்ளலாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆட்சி ஏற்பட்டவுடன், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைப்பதற்கு ரூ.99.90 கோடியை முதலமைச்சர் அரசு நிதியாக வழங்கினார்.


இந்த சர்வதேச மையம் அமைக்க பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கு பிறகு “பி” சைட் பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் வள்ளலாரின் அருந்தவ சீடர்களுக்கு அர்ப்பணிக்கப்படும். மற்றொரு பகுதியான “ஏ” சைட்டி-ல் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கு வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற உத்தரவிற்கு பின் அந்த பணிகளும் மேற்கொள்ளப்படும்.


வள்ளலாரின் ஆன்மா


துணை நிற்கும்


பெருவெளிக்கு, வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் இடத்தால் எவ்வித இடர்பாடும் இல்லை என்று நீதிமன்றத்தில் நாங்கள் எடுத்து வைத்த வாதத்தின் அடிப்படையில் ஒரு பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது. மற்றொரு பகுதியில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதன்படி அறிக்கை அளித்துள்ளோம். நிச்சயமாக நீதி வெல்லும், வள்ளலார் சர்வதேச மையம் திறந்தமனதோடு, எவ்வித காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் தராமல் அவரது புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அமைத்திட வேண்டும் என்ற இந்த நற்பணிக்கு வள்ளலாரின் ஆன்மா எல்லா வகையிலும் துணை நிற்கும்.


இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சி.ஜோதி, உதவி ஆணையர் ஆர்.சந்திரன், நிர்வாக அலுவலர் ஜெ.ராஜா சரவணகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%