
புதுக்கோட்டை, அக். 14- 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் சரகம் ஊனையூர் சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன் (22). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பெரிய கருப்பனைக் கைது செய்தனர். வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், நீதிபதி கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். குற்றவாளி பெரிய கருப்பனுக்கு, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?