12 பெட்டிகளுடன் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் மேம்படுத்தப்பட்ட மெமு ரயில் சேவை தொடக்கம்!

12 பெட்டிகளுடன் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் மேம்படுத்தப்பட்ட மெமு ரயில் சேவை தொடக்கம்!

சென்னை:

மேம்​படுத்​தப்​பட்ட வசதி​களு​டன் 12 பெட்​டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம்தடத்தில் இயங்​கத் தொடங்​கி​யுள்​ளது. சென்​னை​யில் இருந்து அரு​கிலுள்ள நகரங்​களுக்கு பயணி​கள் சென்று திரும்ப வசதி​யாக, மெமு (மெயின்​லைன் எலக்ட்​ரிக் மல்​டிபிள் யூனிட்) ரயில்​கள் பயனுள்​ள​தாக இருக்​கின்​றன.


இந்த ரயில்​கள் சென்னை ரயில்வே கோட்​டத்​தில் காட்​பாடி - அரக்​கோணம், சென்னை கடற்​கரை - மேல்​மரு​வத்​தூர், திருத்​தணி - சென்னை சென்ட்​ரல், சென்னை - திருப்​ப​தி, நெல்​லூர் உட்பட 15-க்​கும் மேற்​பட்ட வழித்​தடங்​களில் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​கள் அனைத்​தும் 8 அல்​லது 9 பெட்​டிகளாக மட்​டுமே இணைக்​கப்​பட்​டிருக்​கும். ஒவ்​வொரு ரயில் பெட்​டி​யிலும் இடவசதி குறைவாக இருக்​கும்.


இதன் காரண​மாக, இந்த ரயில்​கள் காலை, மாலை வேளை​களில் நெரிசல் மிகுந்த (பீக் அவர்​ஸில்) நேரங்​களில் இயக்​கப்​படும் போது, கூட்​டம் நிரம்பி வழிந்து பயணி​கள் கடும் சிரமத்தை சந்​திக்​கின்​றனர். எனவே, இந்த ரயில்​களில் 12 பெட்​டிகள் கொண்ட ரயில்​களாக இயக்க வேண்​டும் என்​றும், மெமு ரயில்​களில் வசதி​களை மேம்​படுத்த வேண்​டும் என்​றும் பயணி​கள் கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், மேம்​படுத்​தப்​பட்ட வசதி​களு​டன் 12 பெட்​டிகள் கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம் வழித்​தடத்​தில் இயங்​கத் தொடங்​கி​யுள்​ளது.


இதுகுறித்​து, சென்னை கோட்ட ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த மேம்​படுத்​தப்​பட்ட மெமு ரயில், பஞ்​சாப் மாநிலம் கபூர்​தலா​வில் உள்ள ரயில் பெட்டி தொழிற்​சாலை​யில் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.


இது ஒரு மின்​சார மல்​டிபிள் யூனிட் ரயில் ஆகும். நேரடி மின்​னோட்​டத்​தில் இயங்​கும் மெமு ரயில்​களை விட இந்த ரயில்​கள்பல நன்​மை​களை வழங்​கு​கின்​றன. பழைய மெமு ரயில்​களை விட இந்த ரயில்​களில் இட வசதி அதி​க​மாக உள்​ள​தால், 30 சதவீதம் பயணி​கள் வரை கூடு​தலாக பயணிக்க முடி​யும். பிரேக்​கிங் முறை அதிக திறன் கொண்​டது.


இந்த ரயி​லில் குஷன் இருக்​கைகள், கழி​வறை வசதி, மேம்​படுத்​தப்​பட்ட கதவு​கள், கண்​காணிப்பு கேமி​ராக்​கள் ஆகியவை இடம் பெற்​றுள்​ளன. அவசர காலத்​தில் பயணி​கள், ஓட்​டுநருடன் நேரடி​யாக பேசும் வசதி, மொபைல் சார்​ஜிங் வசதி உள்​ளிட்ட வசதிகளும் இடம் பெற்று இருக்​கின்​றன. இந்த ரயிலுக்கு கிடைக்​கும் வரவேற்பை பொருத்​து, எதிர்​காலத்​தில்​ கூடு​தல்​ மெமு ரயில்கள்​ இயக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%