2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி. - ஹேசில்வுட் அபாரம்

2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி. - ஹேசில்வுட் அபாரம்



மெல்பர்ன்: இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அபாரமாக பந்து வீசி இருந்தார்.


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது.


இந்நிலையில், 2-வது டி20 போட்டி இன்று மெல்பர்னில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய கிரிக்கெட் அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபிஷேக் சர்மா 68, ஹர்ஷித் ராணா 35 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் ஜோஷ் ஹேசில்வுட். பார்ட்லெட் 2, நாதன் எல்லிஸ் 2, ஸ்டாய்னிஸ் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இந்திய அணி வீரர்கள் அக்சர் மற்றும் பும்ரா ரன் அவுட்டாகி வெளியேறினார்.


126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, 13.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கேப்டன் மார்ஷ் 46, டிராவிஸ் ஹெட் 28, ஜோஷ் இங்லிஸ் 20, மிட்செல் ஓவன் 14 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா, வருண், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தொடரின் அடுத்த போட்டி வரும் ஞாயிறு அன்று ஹோபர்ட்டில் நடைபெறுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%