தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் சாதித்ததாக உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் 35-வது மற்றும் இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர்.இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.
இளம்பரிதிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,
தமிழகத்துக்கு இந்திய சதுரங்கத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் பெருமைக்குரிய தருணமாக இது அமைந்துள்ளது. இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராரும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டருமான இளம்பரிதிக்கு வாழ்த்துகள். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாம்பியன் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளியான இளம்பரிதி, தொடர்ந்து மேலும் பல வெற்றிகளைப் பெறவும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.
கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாட்டின் 35-வது மற்றும் இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராக இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.
சென்னை,
போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் 35-வது மற்றும் இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர்.இளம்பரிதி உருவெடுத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"சதுரங்கத்தில் தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் அவர் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும் போது இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?