வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு பெற்றுத்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் கைது
சீனிவாசன்
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, நந்தவனமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (54). இவருக்கு, கடந்த மே மாதம் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகரில் வசித்து வந்த சீனிவாசன் என்ற வாசு (32) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சீனிவாசன், தனக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணி புரிந்துவரும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நெருக்கமானவர் எனவும், அவர் மூலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடுகளை பெற்றுத் தருவதாகவும், அதற்காக ஒரு வீட்டுக்கு ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஜெகநாதன், உறவினர்கள், நண்பர்கள் என 17 பேரிடம் ரூ.20 லட்சத்தை வாங்கி சீனிவாசனின் வங்கிக் கணக்கு அனுப்பியுள்ளார். பணம் அளித்து பல மாதங்களாகியும், வீடு ஒதுக்கீடுகளை பெற்றுத் தராமல் சீனிவாசன் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த ஜெகநாதன், இதுகுறித்து ஆவடி குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், நவசக்தி பீடம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் சீனிவாசன், போலி சாமியார் என்பதும், அவர் ஜெகநாதனை ஏமாற்றி பணம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து,சீனிவாசன் கைது செய்யப்பட்டார். மேலும், முக்கிய தேசிய கட்சித் தலைவரின் பெயரை கூறி, அவர் மூலமாக தேர்தலில் எம்.பி. சீட் வாங்கி தருவதாக கூறி, சீனிவாசன் ஒருவரிடம் ரூ.44 லட்சம் பெற்று ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?