21 ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரு நாடுகளில் மோசமான பட்டினி மேலும் 16 நாடுகள் பாதிக்கப்படும் : உலக உணவுத்திட்டம் எச்சரிக்கை

21 ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரு நாடுகளில் மோசமான பட்டினி மேலும் 16 நாடுகள் பாதிக்கப்படும் : உலக உணவுத்திட்டம் எச்சரிக்கை

21 ஆம் நூற்றாண்டில் முதல் முறை யாக ஒரே நேரத்தில் இரு நாடுகளில் மோசமான பட்டினி நிலவுகிறது. மேலும்16 நாடுகள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது என உலக உண வுத்திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகள் ராணுவத்திற்குச் செலவிடும் தொகையில் ஒரு சதவிகி தத்துக்கும் குறைவாகச் செலவு செய் தால் உலகம் முழுவதும் பட்டினியை முடி வுக்குக் கொண்டு வந்து விடலாம் எனவும் தனது அறிக்கையில் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பார்வை என்ற அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. அதில் 2026 ஆம் ஆண்டு சுமார் 31.8 கோடி மக்கள் மிக கடு மையான வறுமையில் தள்ளப்படு வார்கள். அதில் இவர்களில் 4.1 கோடி மக்கள் அவசர நிலை அல்லது அதனை விடத் தீவிரமான நிலைக்கு தள்ளப்படு வார்கள் என எச்சரித்துள்ளது. இந்த சூழலில் 2030 ஆம் ஆண்டுக் குள் உலகம் முழுவதும் இந்த பட்டினி யை முடிவுக்குக் கொண்டு வரலாம். அதற்கு ஒரு வருடத்திற்கு 7 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் (93 பில்லியன் டாலர்கள்) மட்டுமே செலவிட்டால் போது மானது. இது ஒன்றும் மிகப்பெரிய தொகை அல்ல. கடந்த பத்தாண்டுகளில் அமெ ரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பியா என உலக நாடுகள் தங்களின் ராணு வத்துக்காகவும் போருக்காகவும் செலவு செய்த தொகையுடன் ஒப்பிடும் போது ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான பணம் தான். கடந்த 10 ஆண்டுகளில் உலக நாடு கள் ராணுவத்துக்காக சுமார் 18 கோடியே 19 லட்சத்து 23 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன. இத னுடன் ஒப்பிட்டால் உலகம் முழுவதும் பட்டி னியை முடிவுக்கு கொண்டு வர ஆகும் அளவு வெறும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகும். மனித குலத்தின் அவமானம் இந்த அறிக்கையின் மூலமாக காசா மற்றும் சூடானின் சில பகுதிகளில் தீவிரமான பஞ்சம் நிலவுவது மீண்டும் உறுதியாகியுள்ளது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் இரண்டு நாடுகளில் ஒரே நேரத்தில் தீவிரமான பஞ்சம் ஏற்படு வது இதுவே முதல் முறையாகும். இது மனித குலத்தின் அவமானமாகப் பார்க் கப்படுகிறது. பசியால் வாடும் மக்களுக்கான சர்வதேச ஆதரவு மெதுவாகவும், அங்கும் இங்குமாக துண்டு துண்டாகவும் மற்றும் போதிய நிதி இல்லாததால் விரை வாகச் செயல்பட முடியாமலும் உள்ளது என்று உலக உணவுத் திட்டம் கவ லையை வெளிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உலகெங்கிலும் போர்களா லும் வறுமையாலும் துன்பத்தில் தள்ளப் பட்டுள்ள மக்கள் அடுத்த ஆண்டு போது மான உதவியைப் பெற முடியாமல் போக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல ஹைட்டி மற்றும் மாலியில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமன் வரை சுமார் பதினாறு நாடுகளில் மிகக்கடுமையான பஞ்சம் உருவாகும் அபாயம் தற்போது உருவாகி யுள்ளது. ஏழைகளே அதிகபட்ச விலையைக் கொடுக்கிறார்கள் போர்களே சுமார் 69 சதவிகிதப் பட்டி னிக்கு முக்கியக் காரணமாக உள்ளது. வறட்சி, வெள்ளம் மற்றும் புயல்கள் இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கு கின்றன. ஐ.நா. துணைப் பொதுச்செய லாளர் அமினா முகமது, யானைகள் சண் டையிடும்போது, புல் தான் பாதிக்கப் படும் என ஆப்பிரிக்கப் பழமொழியைக் கூறி போர்களிலும், இயற்கைப்பேரிடர்க ளிலும் “ஏழைகளே அதிகபட்ச விலை யைக் கொடுக்கிறார்கள்,” என்று குறிப் பிட்டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%