72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: சிவகங்கையில் பெரியகருப்பன் துவக்கிவைத்தார்
Nov 17 2025
10
72–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் தொடக்க நாளான நேற்று (14–ந் தேதி) சிவகங்கையில் உள்ள திருக்கோஷ்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூட்டுறவு கொடி ஏற்றி வைத்தார்.
இந்த ஆண்டும் கூட்டுறவுச் சங்கங்கள் “தற்சார்பு இந்தியா” ஒரு கருவி என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 72–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் தொடக்க நாளான நேற்று சிவகங்கையில் உள்ள திருக்கோஷ்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூட்டுறவு கொடி ஏற்றி வைத்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது தெரிவித்ததாவது:–-
டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவுத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கூட்டுறவுத் துறைஅமைச்சர் அமித்ஷா, கூட்டுறவுத்துறை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பாராட்டினார். இச்செயல்பாடுகளை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டினார். இதுபோன்ற சிறப்பு வாய்ந்த கூட்டுறவுத்துறையாக தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருகிறது.
மேலும், இந்த கூட்டுறவு வாரவிழாவில் இன்னும் மென்மேலும் கூட்டுறவுத்துறையின் சிறப்புகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்லவும் நலத்திட்ட உதவிகள் மக்களிடத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கிலும் செயல்படவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் கூட்டுறவு வார விழா கருப்பொருளின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், கூட்டுறவு சங்கங்களின் திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் எளிதில் கடன் பெறுவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள், கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்குகள் துவங்குவதற்கான சிறப்பு முகாம்கள், ரத்த தான முகாம், கால்நடை மருத்துவ முகாம், கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள், கூட்டுறவு தயாரிப்புகளின் கண்காட்சி மற்றும் விற்பனை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை கலெக்டர் பொற்கொடி கலந்து கொண்டார். மேலும் கூட்டுறவு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?