72 வது திருக்குறள் ஆய்வு பேருரை

72 வது திருக்குறள் ஆய்வு பேருரை


வந்தவாசி , செப் 29:

 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் குந்த குந்த நகரில் உள்ள திருக்குறள் மண்டபம் மற்றும் ஆய்வு மையத்தில் திருக்குறள் ஆய்வு மையம் சார்பில் 72ஆவது திருக்குறள் ஆய்வு பேருரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு திருக்குறள் மண்டபம் மற்றும் ஆய்வு மைய தலைவர் அ.பு.அறவாழி தலைமை தாங்கினார். 

சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வித்துவான் வே.அரங்கநாதன் பங்கேற்று 'காப்பியங்களில் திருக்குறள் ஆளுமை' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் வந்தவாசி ஸ்ரீ ராமாநுஜர் பாலர் பண்பாட்டு மைய மாணவர்கள் பங்கேற்று திருக்குறள் ஒப்பித்தனர். அவர்களுக்கு திருக்குறள் ஆய்வு மையம் சார்பில் நினைவு பரிசாக திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், மாணவ மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%