
பேராவூரணி ரோட்டரி சங்கமும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையும் இணைந்து நடத்திய இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம், பேராவூரணி அரசு கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் சிவ.சதீஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்வுக்கு, சோன் 28 & 29 துணை ஆளுநர் கே.ராமதாஸ் மற்றும் கால்நடை மருத்துவர் சா. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடுப்பூசி முகாமில், 220 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்வில், ரோட்டரி சங்க முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரோட்டரி சங்க செயலாளர் கே.எஸ்.நீலகண்டன் வரவேற்க, சங்க பொருளாளர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?