8 ஆவது முறையாக விருது பெற்ற தமிழ்நாடு

8 ஆவது முறையாக விருது பெற்ற தமிழ்நாடு

சென்னை, செப்.23 -

தமிழகம் தொடர்ந்து 8 ஆவது முறை யாக சிறந்த உடல் உறுப்பு தானத்திற்கான விருதை பெற்றுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத் தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் ‘உறுப்பு தான தினம்-2025’ உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்தல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணி யாற்றிய மருத்துவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவிக்கையில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2008 செப்.5 ஆம் தேதி மூளைச் சாவடைந்த வர்களிடமிருந்து உடலுறுப்பு பெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணை யம் உருவானது. 2024 ஆம் ஆண்டில் 268 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதனை பாராட்டி ஒன்றிய அரசு, உடலுறுப்பு தானத் தில், சிறந்த மாநிலம் என்ற விருது அளித்து உள்ளது. தொடர்ந்து 8 ஆவது முறையாக தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது. இதுவரை 522 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார் கள். 23,189 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்து வக் கல்லூரிகளில் உடல் உறுப்பு தானம் அளித்தவர்களின் பெயர்கள் கொண்ட ஒரே மாதிரியான கல்வெட்டை வைக்கும் பணியை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளோம்” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%