ஆளில்லா ககன்யான் ராக்கெட் டிசம்பரில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

ஆளில்லா ககன்யான் ராக்கெட்  டிசம்பரில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

சென்னை: ஆளில்லா ககன்யான் ராக் கெட்டை வரும் டிசம்பருக்குள் அனுப்ப திட்ட மிட்டுஉள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாரா யணன் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடி அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த 19 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாசாவும், இஸ்ரோவும் இணைந்து விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 2026 மார்ச் 7 முதல், 8 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முயற்சி செய்து வருகிறோம். முக்கியமாக ஆளில்லா ககன்யான் ராக்கெட்டை வரும் டிசம்பரில் அனுப்ப திட்ட மிட்டுள்ளோம். அதன் வெற்றியை தொ டர்ந்து, 2027-இல் இந்தியாவில் தயாரித்த ராக்கெட் மூலம், இந்திய விண்வெளி வீரர் களை அனுப்பி திரும்பி கொண்டு வரு வோம்” என்று தெரிவித்தார். தனியார் தொழிற்சாலைகளில் 5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதில் முதல் ராக்கெட்டை வரும் மார்ச் மாதம் அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். வயோ மித்ரா திட்டத்தில் பெண் ரோபோவை முதல் ஆளில்லா ராக்கெட்டில் அனுப்ப உள்ளதாகவும் நாராயணன் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%