ஜெ.பி.நட்டா அக்டோபர் 6– ந் தேதி தமிழகம் வருகிறார்: நயினார் நாகேந்திரன் தகவல்

ஜெ.பி.நட்டா அக்டோபர் 6– ந் தேதி தமிழகம் வருகிறார்: நயினார் நாகேந்திரன் தகவல்

சென்னை, செப். 24–


பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அக்டோபர் 6–ந் தேதி தமிழகம் வர இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அக்டோபர் 6–ந் தேதி சென்னை வருகிறார். சென்னை எம்ஜிஆர் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். டெல்லி பயணத்தின்போது அவரது பயணம் குறித்து அவரிடம் பேசினேன். அக்டோபர் 12–ந் தேதி பாஜக சார்பில் மதுரையில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்கப்படவுள்ளது. அதில் கூட்டணியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.


இவ்வாறு அவர்கூறினார்.


தமிழக பாஜகவிற்கு நீங்கள் தலைவரா அல்லது அண்ணாமலை தலைவரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் இடையிலான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று கூறிய நயினார் நாகேந்திரன், இந்த கேள்வி தங்கள் இருவருக்கும் மோதலை ஏற்படுத்த கேட்கப்பட்டது போல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%