
புதுடெல்லி,
இந்தியாவின் அரசு தொலைதொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உள்ளது. கடந்த மாத இறுதியில் நாடு முழுவதுமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணையவசதியை பெறுவதற்கான 4ஜி சேவை அமல்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் அடுத்த 8 மாதங்களில் அனைத்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து 4ஜி செல்போன் கோபுரங்களும் 5ஜியாக மாற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக தொலைதொடர்பு மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி அடுத்த 6 முதல் 8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி செல்போன் கோபுரங்கள் அனைத்தும் 5ஜியாக மாற்றப்படும். இதன்மூலம் அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?