corporate உலகு

corporate உலகு

     மால் களில் பொருட்கள் வாங்குகையில் கவனமாக இருங்கள். நீங்கள் கொஞ்சம் அசந்தால் ஆயிரங்கள் எளிதாக பறி போய்விடும்.


   கண்ணை கவரும் கவர்ச்சியான பேக்கிங்குகள் உங்களை சுலபமாக வீழ்த்தி விடும்.


       ஒரு பக்கம் 100gm முந்திரி 80 ரூபாய்க்கு இருக்கும். பக்கத்திலேயே பெரிய அழகான கவர்ச்சிகரமான பையில் 150 ரூபாய் போட்டிருக்கும் . அதுவும் முந்திரி தான்.


        நீங்க இது பெரிய சைஸ் .அளவு கூட அதனால் விலை அதிகம் என்று நம்பி வாங்குவீர்கள்.


        உண்மையில் அது 50gm தான் இருக்கும். பாக்கெட் பெரிது.அதற்குள் வேறு ஒரு பாக்கெட் . அதில் கொஞ்சம் முந்திரி.நிறைய காற்று .


     கண்முன்னாடி 40 ரூபா சரக்கை 150 ரூபாய்க்கு தலையில் கட்டி விடுகிறான்.

இதற்கு யாரை குறை சொல்வது.


    இது அவர்கள் வியாபார தந்திரம். மயங்காமல் இருந்து ஏமாறாது  இருப்பது நமது கையில் தான் இருக்கிறது.


     இன்னொரு புத்திசாலி பெண்மணியை பாருங்கள். இவருக்கு ஒரு T.V யும் ஒரு அயர்ன் பாக்ஸ்  ஸும் வேணும்.


   கடை வீதிக்கு வந்தாகி விட்டது. ஆஃர் அன்றே கடேசி. T.V வாங்கினா 5% ஆபர் . அயன் பாக்ஸ் ஒன்று வாங்கினால் ஒன்று பிரீ .100% ஆபர் .


    30000 T.V வாங்கினா 1500 ரூபாய் தள்ளுபடி போக 28500. இவர் கையில் சரியாக 28500 தான் இருக்கிறது.


     iron box வாங்க காசு இல்லை. அன்னைக்கு  ஒரு iron box வாங்கினா இன்னொன்னு சும்மா கிடைக்கும்.


     நாளைக்கு வந்தா இந்த சலுகை கிடையாது. T.Vக்கு வெறும் 5% தான் தள்ளுபடி. இது ஒண்ணுக்கு ஒன்னு.இன்றைக்கு விட்டா அப்புறம் கிடைக்காது.


     so முதலில் இதை வாங்கிக் கொள்வோம். நாளை வந்து T.V யை வாங்கிக் கொள்வோம்.5% தானே என்று இரண்டு iron box களை பெருமையோடு வாங்கி செல்கிறார்.


     அன்று iron box , 500 ரூபாய்க்கு வாங்குகிறார். மறு  நாள் 30000 ரூபாய் கொடுத்து T.V வாங்குகிறார்.


   மொத்தத்தில் 30500 ரூபாய் கொடுத்து ஒரு T.V யும்  2 IRON BOX ம்  வாங்கி உள்ளார்.


     இதையே இன்று 28500 கொடுத்து ஒரு T.V யும் ,மறுநாள் 1000 ரூபாய் கொடுத்து இரண்டு iron box ம் வாங்கி இருக்கலாம். மொத்தத்தில் 29500 ரூபாய் தான் ஆகும்.


      இவரது அவசர கணக்கினால் 1000 ரூபாய் நஷ்டம். நம் மனது இப்படித் தான் கணக்கு போடும்.


      தள்ளுபடி களில் மயங்காது நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். இன்றே கடைசி என்ற வாசகம் உங்களை யோசிக்க விடாமல் அவசரப் படுத்துகிறது.


     எந்த கடையிலாவது சார் , இன்னிக்கு ஒரு நாள் தான் இந்த ஆபர் . நாளை க்கு வந்தா கிடைக்காது. போனா  வராது  என்று வலை விரித்தால் மயங்கி விடாதீர்கள்.


    வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்வானாடா...... என்கிற மாதிரி பெரிய சைஸ் வாங்கினா  லாபம் .அளவு அதிகம் இருக்கும் என்னும் நம்பிக்கை.


     விலை அதிகம் என்றால் தரமும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கைகளை எல்லாம் இன்று நன்கு பயன் படுத்தி கொண்டு நம்மை ஏமாற்றுகிறார்கள்.


     இன்று நுகர்வோர் கலாச்சாரம் அதிகமாக ஆகி விட்டது. தேவையில்லாமல் பார்ப்பதை எல்லாம் வாங்கி குமிக்கிறார்கள்.


     அளவை பாருங்கள் .விலையை பாருங்கள். தேவையா என்று பாருங்கள். முதலில் சின்னதாய் ஒன்று வாங்கி உபயோகித்து பாருங்கள்.


    பிடித்திருந்தால் அடுத்தமுறை அளவு, விலை பார்த்து வாங்கலாம். எடுத்த உடனே பார்க்க அழகா இருக்கு என்று அதிக அளவில் வாங்கி அவஸ்தை படாதீர்கள்.


      சமீபத்தில் நான் பார்த்தது. ஒரு கடையில் ஒரு shirt 2000 ரூபாய். மூன்று shirt வாங்கினால் இரண்டு இலவசம்.


   6000 ரூபாய்க்கு 3 ஷர்ட்  வாங்கினால் 4000 மதிப்புள்ள 2 ஷர்ட் இலவசம். அதாவது 6000 ரூபாய்க்கு 4000 ரூபாய் லாபம். அதாவது 66.67%.


    பக்கத்து கடையில் 10000 ரூபாய்க்கு ஷர்ட் வாங்கினால் 40% டிஸ்கவுண்ட் .

அதாவது 10000 க்கு 4000.


    10000 க்கு 4000 லாபமா, 6000 க்கு 4000 லாபமா என்றால் 6000க்கு 4000 தான் லாபம் மாதிரி தோணும்.


    இங்கு நன்றாக யோசித்து பார்க்கணும். முதல் கடையில் 3 ஷர்ட் வாங்கினா 2 ஷர்ட் லாபம் என்று போகிறோம்.


    அங்கு நமக்கு பிடித்தமாதிரி ஒரு ஷர்ட் தான் இருக்கும். 4000 லாபத்துக்கு ஆசை பட்டு மனதுக்கு பிடிக்க விட்டாலும் சுமாரான 2 ஷர்ட் வாங்குவோம்.


    இப்போ 3 ஷர்ட் வாங்கியாச்சு. இப்ப நமக்கு 2 ஷர்ட் பிரீ. 3 ஷர்ட் வாங்கறதுக் குள்ளேயே தாவு தீர்ந்து போச்சு. இனி மேலும் இரண்டை தேடி கடைசியில் சுமாருக்கும் சுமாராய் ஏதோ 2 ஷர்ட் களை வேறு வழியில்லாமல் வாங்கி வருவோம்.


     5 ஷர்ட் டில் மனதுக்கு பிடித்தது ஒன்று தான். உண்மையில் அவன் கடையில் இருந்த மூவ் ஆகாத சரக்கை நம் தலையில் கட்டி விட்டான். இதுவே நிஜம். நாம் மீண்டும் இளிச்ச வாயன் ஆகி விட்டோம்.


    சரி .இப்ப அடுத்த கடைக்கு போவோம் .இங்கு 10000 ரூபாய்க்கு வாங்கினாதான் 4000 ரூபாய் லாபம்.


    இங்கும் ஒரு ஷர்ட் 2000 தான். so 5 ஷர்ட் வாங்கணும். இங்கு உங்களுக்கு ஒரு ஷர்ட் தான் பிடித்த மாதிரி இருக்கு என்றால் வாங்காமலே திரும்பி விடுவீர்கள்.


      குறைந்தது 4 ஷர்ட் களாவது பிடித்தால் தான் வாங்குவீர்கள். இப்போது நீங்கள் 10000 ரூபாய்க்கு உங்களுக்கு பிடித்த 4 ஷர்ட் சுமார் ஷர்ட் ஒன்று என்று வாங்குகிறீர்கள்.


      40%தள்ளுபடி போக 6000 ரூபாய் கொடுக்கிறீர்கள்.கூட்டி கழிச்சு பாருங்க.  இரண்டு கடையிலும் 6000 கொடுத்து  தான் 5 ஷர்ட் வாங்கி இருக்கிறீர்கள்.


     முதல் கடையில் வாங்குவது தான் லாபம் என்று நம்பினீர்கள் . ஆனால் அங்கே  வாங்கியது திருப்தியில்லை.


    இரண்டாவது கடையில் வாங்கினால் லாபமில்லை என்று நினைத்தீர்கள். ஆனால் இங்கே வாங்கியது தான் திருப்தி தந்தது.


     இங்கே எங்கு தவறு நடந்தது. உங்கள் மனதின்  தவறான  புரிதலினால் ஏற்பட்ட குழப்பம் தான் சிக்கலுக்கு காரணம் .


    இன்றைய corporate உலகு நமது நம்பிக்கைகளை வைத்து நம்மை ஏமாற்றுகிறது.


    நம் கையை வைத்து நம் கண்ணை நாமளே குத்திக் கொள்ள செய்கிறது. இது இந்த கால வியாபார யுக்தி.


    இதை புரிந்து கொண்டு புத்திசாலித் தனமாய் செயல் படுவது நமக்கு நல்லது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%