Samayal tips

Samayal tips


ஆப்பம் 


தேவையானவை :

 பச்சை அரிசி – 400 கிராம்

 இலமாவில் கொஞ்சம் பருமாவு – 100 கிராம்

தேங்காய் – 1

 உப்பு – தேவைக்கு

 சோடாப்பு – தேவைக்கு



செய்முறை விளக்கம் :


 பச்சை அரிசியை 3 மணி நேரம் ஊர வைக்கவும்.

பின்பு மிக்ஸ்யில் தண்ணீர் ஊற்றி நன்கு அடிக்கவும்.

இலமாவில் ¾ லிட்டர் போல் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வைவிடாமல் காய்ச்சவும்.

 இலமாவு கப்பி கூல் போல் நன்கு சேர்ந்ததும் நன்கு ஆர வைக்கவும்.

 இலமாவு கப்பி நன்கு ஆரிய பிறகு, அடித்து வைத்த பச்சை அரிசியுடன் நன்கு சேர்த்து கிளறிவிடவும்.

 இந்த கலவையை ஒரு நாள் முழுவதும் மூடிப்போட்டு அப்படியே வைத்து விடவும்.

 மறுநாள் தேங்காவை மிக்ஸ்யில் போட்டு தலைப்பால் தனியாகவும், இரண்டாம் பால், மூன்றாம் பால் தனியாவும் எடுக்கவும்.

 தலைப்பாலை ஆப்பமாவு கலவையுடன் ஊற்றவும்.

 ஆப்பம் ஊற்றும் பருவம் வரவில்லை என்றால் இரண்டாம் பாலையும் ஊற்றவும்.

 பிறகு, உப்பும் சோடாப்பும் போட்டு நன்கு கிளரி விட்டு தவாவில் ஆப்பம் ஊற்றவும்.

 மூடிப்போட்டு கறை கொஞ்சம் முறுகியதும் எடுத்து சாப்பிடவும்.


தயார் செய்யும் நேரம் : ½ மணி நேரம்.

சமைக்கும் நேரம்: : ½ மணி நேரம்.

புளிக்க வைக்க : 1 நாள்

சாப்பிடும் அளவு : 20 ஆப்பம்.



கூடுதல் குறிப்பு :


• உப்பு அதிகமாக போட்டால் சுவை போய்விடும். சோடாப்பு கொஞ்சம் கூடுதலாக போட்டால்தான் soft ஆக இருக்கும்.


• ரெம்ப அதிகமாக சோடாப்பு போட்டாலும் மஞ்சலாகிவிடும்.மாவுக்கு ஏற்றாற்போல் போடவும்.


• Non Stick தவா என்றால் எண்ணெய் தேவையில்லை.இரும்பு சட்டி என்றால், துணியில் நல்லெண்ணெய் தொட்டு லேசாக தேய்த்துக் கொள்ளவும்.


• இரும்பு சட்டியில் சுடும் ஆப்பமே மிகவும் சுவையாக இருக்கும்.




 மங்களூர் மசாலா தோசை 

 

தேவையான பொருட்கள்


தோசை மாவு – 2கப்

நெய்/ எண்ணெய் தேவைக்கு

இட்லி பொடி – தேவைக்கு


உருளை ஸ்டப்பிங் செய்ய தேவையான பொருட்கள்:


உருளை கிழங்கு -1/2 கிலோ

வெங்காயம் – 2

தக்காளி-1

பச்ச மிளகாய் – 3-4(கார தேவைக்கு)

சாம்பார் பொடி – 1டேபில் ஸ்பூன் (விரும்பினால்)

மஞ்சள்தூள் -சிறுது

உப்பு – தேவைக்கு

கொத்தமல்லி இலை தேவைக்கு


தாளிக்க:

கடுகு, சீரகம் – 1ஸ்பூன்

உளுந்து-1/2 ஸ்பூன்

கடலைபருப்பு – 1ஸ்பூன்

சிகப்பு மிளகாய் – 2-3

கறிவேப்பிலை ஒரு கொத்து.


தக்காளி சட்னி:


பல்லாரி வெங்காயம்- 1

தக்காளி – 3-4

சிகப்பு மிளகாய் – 5 (கார தேவைக்கு)

மிளகு,சீரகம், உளுந்து, கடலைபருப்பு – தலா அரை ஸ்பூன்

சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன்

பூண்டு – 2பல்

கடுகு -1/4ஸ்பூன்

கறிவேப்பிலை கொஞ்சம்

கொத்தமல்லி இலை சிறுது

ந.எண்ணெய் – 2ஸ்பூன்


உருளை ஸ்டப்பிங் செய்முறை:


1.முதலில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்.


2.கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.


3.நீட்டமாக நறுக்கிய பல்லாரி வெங்காயத்தினை சேர்க்கவும். அதில் நறுக்கிய தக்காளி பொடியாக நறுக்கிய பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து சிறுது வதக்கவும். பச்ச வாசனை போன பின்பு அதில் மசித்த உருளை சேர்த்து கிளரி 5-7நிமிடம் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.


தக்காளி சட்னி செய்முறை:


கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து விட்டு மேல் சொன்ன பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக குறைந்த தனலில் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.


மசாலா தோசை செய்முறை:


தோசை தவாவில் மெலிசாக, பரவலாக தோசை ஊற்றவும்.




லெமன் இடியப்பம்  

 

இடியப்பம் – 10

எலுமிச்சை பழம் – 1/2

பச்சமிளகாய் – ஒன்று

மஞ்சள்தூள் சிறுது

பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

உப்பு தேவைக்கு

தண்ணீர் – சிறுது

கொத்தமல்லி இலை – சிறுது


தாளிக்க :


எண்ணெய் – ஒரு மே .கரண்டி

கடுகு – ஒரு தேக்கரண்டி

உளுந்து – இரண்டு தேக்கரண்டி

சீரகம் – ஒரு தேக்கரண்டி

கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி

வேர்கடலை , முந்திரி பருப்பு – தேவைக்கு

காய்ந்த மிளகாய் – 3

கறிவேப்பிலை ஒரு கொத்து


செய்முறை:


வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.


பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிடவும் .


பிறகு ரெடி செய்த இடியப்பத்தினை சிறுது உதிர்த்து சேர்க்கவும். சிறுது தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்


மேலே எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்..




 ஆப்பம் & கடலைக்கறி 

 

பச்சரிசி – 200 கிராம் (ரைஸ் குக்கர் கப்பில் 1 1/2 கப்)


தேங்காய் – பாதி


தேங்காய் தண்ணீர் – 1 தேங்காய் அளவு(optional)


தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோறு – கொஞ்சம்


சிறிதளவு பழைய சோறு தண்ணீர் – அரைக்க


சோடா உப்பு – 1 சிட்டிகை


1. பச்சரிசியை 5 மணி நேரங்கள் ஊர வைத்து, இதனுடன் துருவிய தேங்காய், பழைய சோறு, தேங்காய் தண்ணீர் மற்றும் பழைய சோறு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, 15 முதல் 18 மணி நேரங்கள் புளிக்க வைத்து, சுடும் பொழுது சோடா உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கலக்கி சுட்டெடுத்தால்..


சுவையான மொரு மொருப்பான ஆப்பம் தயார்


#டிப்ஸ்:


1. தேங்காய் தண்ணீருக்கு பதில் சுடும் பொழுது 1tsp சுகர் சேர்த்துக் கொள்ளலாம்.


#கடலைக்கறி:


#கடலைக்கறி_செய்ய_தேவையான_பொருட்கள்:


எண்ணெய் – தேவைக்கு


கருப்பு கொண்டைக் கடலை – 100 கிராம்


வெங்காயம் – 1 (பெரியது)


தக்காளி – 1


பூண்டு – 5 பல்


பட்டை – கொஞ்சம்


சோம்பு – 1/2 tsp


மிளகு – 1/2 tsp


மல்லி – 1 tblsp


துருவிய தேங்காய் – 1 tblsp


தேங்காய் பால் – தேவைக்கு


வத்தல் தூள்/மஞ்சள் தூள் – தேவைக்கு


பச்சை மிளகாய் – 2


கறிவேப்பிலை – சிறிதளவு


 1. கருப்பு கொண்டைக் கடலையை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊர வைத்து, அந்த தண்ணீரைக் கொண்டே குக்கரில் 4 விசில் போட்டு வேக வைத்து எடுத்து வைக்கவும்.


2. வெறும் சட்டியில் சோம்பு, மிளகு, மல்லி சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.


3. அதே சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பூண்டு, பட்டை, துருவின தேங்காய் சேர்த்து நன்கு வருத்து, மேலே வருத்து வைத்ததோடு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைக்கவும்.


4. தக்காளியை சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கி, ஆர வைத்து அரைத்து எடுத்து வைக்கவும்.


5. பேனில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் மற்றும் வறுத்து போடவும் 


வெஜ் உப்புமா 

 

ரவை – 1 கப்


நெய் – 2 டேபில் ஸ்பூன்


எண்ணெய் – 1 டேபில் ஸ்பூன்


கடுகு – ¼ ஸ்பூன்


சீரகம் – ¼ ஸ்பூன்


கடலை பருப்பு – ¼ ஸ்பூன்


முந்திரி பருப்பு – 10


சின்ன வெங்காயம் – 10-15


மிளகாய் – 1


தக்காளி – 1


மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்


மிளகாய் தூள் – தேவைக்கேற்ப


காய்கறிகள் – 1 கப்


( கேரட், பீன்ஸ், கோஸ், காலிபிளவர், பச்சை பட்டாணி )



கடாயில் நெய் விட்டு ரவையை நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடு, சீரகம், கடலை பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிள்காய சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து காய்கறிகளை உப்பு சேர்த்து எண்ணெயிலே 2-3 நிமிடம் வேக் விடவும்.

இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விட்டு 5-10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து மூடி விடவும்.

கொத்தமல்லி இலை தூவி நெய் விட்டு இறக்கவும்.


 

  கேழ்வரகு அடை 

 



தேவையான பொருட்கள்:


கேழ்வரகு மாவு - 2 கப்

பெரிய வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 3

சீரகம் - 1 டீஸ்பூன்

வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்)

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கேற்றவாறு

எண்ணெய் - 5 டீஸ்பூன்

செய்முறை:


வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் துண்டுகள், சீரகம், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும்.


ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவில் கொட்டவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீரைத் தெளித்து பிசையவும். மாவு சப்பாத்தி மாவை விட சற்று தளர இருக்க வேண்டும்.


தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு தேய்த்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். ஆரஞ்சு பழ அளவிற்கு மாவை எடுத்து தோசைக்கல்லின் நடுவில் வைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வட்டமாக அடையைத் தட்டவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை அடையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கத்தையும் வேக விட்டு எடுக்கவும். சுவையான சத்தான கேழ்வரகு அடை தயார்.


 வெந்தயக்கீரை சப்பாத்தி 

 

தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு - 11/2 கப்

வெந்தயக் கீரை - 1/2 கப்

தயிர் - 1/4 கப்

தண்ணீர் - சுமார் 1/2 கப்

மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன்

தனியாத் தூள் -1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

சீரகம், ஓமம் - 1டீஸ்பூன் (வறுத்து பொடித்தது)

ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்

செய்முறை:


கீரை, பொடிவகைகள், உப்பு இவற்றை பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து கலக்கவும். கோதுமை மாவையும் சேர்க்கவும். சிறிது சிறிதாக நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துகு பிசைந்துகொள்ளவும். பின்னர் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு மேலும் 5 நிமிடங்கள் பிசைந்து, அரை மணிநேரம் மூடி வைக்கவும்.


சப்பாத்தி மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து, சப்பாத்திகளாகத் தேய்த்து சுட்டு எடுக்கவும். காரசாரமான இந்த வெந்தயக்கீரை சப்பாத்திக்கு ரைத்தா, ஊறுகாய், வெண்ணெய், தேன் இவை பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும்.



 பட்டர் நாண் 

 

தேவையான பொருட்கள்:


மைதா மாவு - 2 கப்

ட்ரை ஈஸ்ட் - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 2/3 கப்

செய்முறை:


முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.பிறகு அதனை 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.


பிறகு பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனை மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை மாவை வைக்க வேண்டும்.


நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பட்டர் நாண் தயார். அதன் மீது சிறிது வெண்ணெயை தடவி சூடாக பரிமாறலாம்.



 கோதுமை மாவு இடியாப்பம் :

 


கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

தேவையானவை:


கோதுமை மாவு - 2 கப்

உப்பு - ருசிக்கு ஏற்ப

சர்க்கரை - தேவையான அளவு

தேங்காய் பூ - அரை கப்

ஏலப்பொடி - சிறிதளவு


செய்முறை:


இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கோதுமை மாவை அப்படியே ஒரு துணியில் முடிந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும். சுமார் 20 நிமிடங்களுக்கு அவித்து எடுக்கவும்.


அந்த மாவை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு உள்ளங்கைகளால் புட்டு மாவு பிசைவது மாதிரி செய்தால் பொலபொலவென மாவு உதிர்ந்துகொள்ளும். தேவையான உப்பை சேர்க்கவும். இப்போது கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாவில் தெளித்து கெட்டியாக இடியாப்பம் பிழியும் பதத்திற்கு பிசையவும். ஒரேயடியாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டாம்.


மீண்டும் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். இடியாப்ப அச்சில் மாவை நிரப்பிக்கொள்ளவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு அதில் இடியாப்பத்தை பிழிந்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கவும்.


சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு சர்க்கரை, தேங்காய் பூ, ஏலப்பொடி சேர்த்து சாப்பிடலாம். அல்லது விருப்பமான குருமாவுடன் சாப்பிடலாம்.



 சில்லி சப்பாத்தி 

 

தேவையான பொருட்கள்:


சப்பாத்தி - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

சிவப்பு ஃபுட் கலர் - 1 துளி

கொத்தமல்லித் தழை - கால் கட்டு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் சப்பாத்தியை சின்ன சின்னத் துண்டுகளாக்கி கொள்ளவெம். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும். அடுத்து ஃபுட் கலரில் சிறிது தண்ணீர் கலந்து, அதையும் சேர்க்கவும். பிறகு அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு மிளகாய்த் தூள் சேர்த்து கொள்ளலாம்.


சுவையான சூப்பரான மாலை நேர சிற்றுண்டி சில்லி சப்பாத்தி தயார். இதனுடன் அசைவ பிரியர்கள் முட்டைகளை சேர்த்து சமைத்தால் முட்டை சில்லி சப்பாத்தி செய்யலாம்.



 சேமியா கிச்சடி :


தேவையான பொருட்கள்:


சேமியா - ஒரு கப்

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி - கால் கப் (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1

எண்ணெய் - தேவையான அளவு

எலுமிச்சம்பழச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு,

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் (மூன்றும் கலந்தது)

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சேமியாவை வறுத்துக் கொள்ளவும். நன்கு கழுவி நறுக்கிய காய்கறிகளை 5 நிமிடம் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.


பிறகு, வறுத்த சேமியாவை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறக்குவதற்கு முன் நெய், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சுவையான கிச்சடி சாப்பிட தயார்.



பன்னீர் பாலக் பரோட்டா :

 

தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு - 2 கப்

உப்பு - தேவைக்கு

பாலக் கீரை - 1 கட்டு

கோதுமை மாவு - 3 கப்

அரைத்த பச்சைமிளகாய் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்


ஸ்டஃப்பிங் செய்வதற்கு:


துருவிய பன்னீர் - 1/4 கப்

நறுக்கிய பச்சைமிளகாய் - 3

கொத்தமல்லித் தழை - 4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:


பாலக் கீரையை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து கொள்ளவும்.


கொத்தமல்லித் தழை, பன்னீர், பச்சை மிளகாய், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி பன்னீர் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். சுவை மிகுந்த பன்னீர் பாலக் பரோட்டா தயார்.




Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%