மச்சம்.

மச்சம்.


  "த பாரு மஞ்சு!... நான் காதலுக்கு எப்போதுமே எதிரியில்லை...உன் உண்மையான காதலாக இருக்கும் பட்சத்தில் முழு ஆதரவை தருவேன்!" என்றான் கோபி தங்கை மஞ்சுவிடம்.


  "சரி எங்களோட காதல் உண்மையானதுன்னு நான் எப்படி உனக்கு நிரூபிக்கிறது?"


 "நாளைக்கு ஏரிக்கரையோரம் இருக்கிற கல் மண்டபத்துக்கு தனியாக நீங்க ரெண்டு பேரும் வாங்க!... "


  "அய்யய்யோ... எதுக்கு,?"


  "பயப்படாம வா.. உன் காதலனை ஒண்ணும் பண்ணிட மாட்டேன்"


 பெரிய தயக்கத்துடன் "சரி" என்றாள் மஞ்சு.


ஏரிக்கரை கல் மண்டபத்தில், முகத்தில் முகமூடியோடு திடீரென வந்து சரமாரியாக இருவரையும் தாக்கினான் கோபி.


 துவக்கத்தில் அவனைத் திருப்பித் தாக்கிய குமார் ஒரு கட்டத்தில் தன் தாக்குதலை நிறுத்திவிட்டு அடிகளை வலிய வாங்கிக் கொண்டான்.


குமாரை தரையில் தள்ளி விட்டு மஞ்சுவை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடிய கோபி, சற்றுத் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அவளைத் திணித்து முன் இருக்கைக்குச் சென்று ஸ்டார்ட் செய்து பறந்தான்.


 நின்ற இடத்தில் செய்வதறியாது நின்றான் குமார்.


மறுநாள் குமாரிடமிருந்து தொடர்ந்து வந்த போன் கால்களை தவிர்த்தாள் மஞ்சு.


  "எவனோ என்னை தூக்கிட்டுப் போகும் போது அமைதியாய் நின்ன இவனிடம் என் வாழ்க்கையை கொடுத்தால் என்னாவது?... நாளைக்கே ஏதாவதொரு பிரச்சனைன்னா என்னை விட்டுட்டு எஸ்கேப் ஆகிவிட மாட்டான்னு என்ன நிச்சயம்?"


மூன்று நாட்களுக்குப் பிறகு மஞ்சுவை சந்திக்க அவள் அலுவலகத்திற்கே வந்த குமார் அவளை கட்டாயப்படுத்தி கேண்டீனுக்கு அழைத்துச் சென்றான்.


 'சொல்லு மஞ்சு... ஏன் என்னை அவாய்ட் பண்றே?" கோபமாய் கேட்டான் கோபி.


அவள் காரணத்தைச் சொல்ல, புன்னகைத்தான்.


"என்ன சிரிக்கிற ஒருத்தன் என்னைக் கடத்திட்டு போறதை அமைதியா நின்னு வேடிக்கை பார்த்த உன்னை நம்பி எப்படி என் வாழ்க்கையை ஒப்படைப்பேன்?"


  "என்னை நம்ப வேண்டாம் மஞ்சு உன் அண்ணனை நம்பலாமே"


மஞ்சு நெற்றி சுருக்க, அவள் தாடையைத் தொட்டுத் திருப்பியகுமார் இந்த மாதிரி இடது காதுக்கு கீழே உனக்கு இருக்கிற காசளவு மச்சம் உன் அண்ணனுக்கும் இருக்குன்னு நீ ஏற்கனவே என்கிட்ட சொல்லியிருந்ததை நீ மறந்துட்ட ஆனா நான் மறக்கல! அதனால்தான் என்னை அவன் தாக்கும் போது அந்த மச்சத்தை பார்த்திட்டேன் அதற்குப் பிறகுதான் அமைதி காத்மச்சம்"

  விழிகளை விரித்து வியப்பை காட்டிய மஞ்சு, "குமார்... யூ ஆர் ரியலி கிரேட் மா" என்று முகமலர்ச்சியுடன் அவன் கைகளை இறுகப்பற்ற உதறினான் கோபி.


   "உன்னோட அண்ணனும் நீயும் போட்ட இந்த நாடகத்துல என் மீதான உன்னோட நம்பகத்தன்மையை நான் புரிஞ்சுகிட்டேன்!.. உன் அண்ணனை வெச்சு நீ என்னோட காதலை சோதிக்கிறே.. இப்படிப்பட்ட உன் கூட நான் மட்டும் எப்படி சேர்ந்து பயணிப்பேன்?.. ஸோ... இதுக்கு மேலயும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்க வேண்டாம் இன்றைக்கே சந்தோஷமா பிரிந்து விடலாம்"

சொல்லி விட்டு வேகவேகமாய் நடந்தான் குமார்.


முற்றும்.



முகில் தினகரன் 

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%