தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் அதிநவீன சிறுதுளை இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

தஞ்சாவூர் அனு மருத்துவமனையில்  அதிநவீன சிறுதுளை இதய பைபாஸ்  அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

தஞ்சாவூர், ஆக.21–


தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் நோயாளிக்கு அதிநவீன சிறுதுளை (MICS) இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தனர்.


தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கமலவேலு (வயது 55) அதிநவீன இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளனர். இதய - நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷிக் நிஹ்மத்துல்லா செய்தியாளர்களிட ம் கூறியதாவது,அறுவை சிகிச்சை மேற்கொண்டு 1 மாதத்தில் அவர் வெளிநாட்டில் அவரது தொழிலுக்கு சென்று நலமாக அவரது தொழிலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.


இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் பல இரத்தக்குழாய் இணைப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டன பழமையான திறந்த இதய அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது இந்த புதிய அதிநவீன முறை சிகிச்சையில் மார்பின் இடப்பக்கத்தில் சிறிய வெட்டின் வழியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில் மார்பு எலும்பு வெட்டப்படாது என்பதனால் நோயாளிக்கு ஏற்படும் உடல் பாதிப்பு குறைவாகவும், குணமடையும் காலம் வேகமாகவும் அமைகிறது.


ஒரே அறுவை சிகிச்சை


நோயாளிகள் எதிர் பார்த்ததைவிட விரைவில் எழுந்து நடக்க முடியும். மேலும் வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சைவிட இயல்பு வாழ்கைக்குத் திரும்பும் நேரம் குறைவாக உள்ளது என தெரிவித்தார். மருத்துவ மனையின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் ஆர்.சி.சிவகுமார் கூறுகையில் இந்த நவீன சிகிச்சை முறையில், பல இரத்த குழாய் இணைப்பு செயல்படுத்தப்பட்டதால், இதய குழாய்களில் ஏற்பட்ட பல தடைகள் ஒரே அறுவை முறையில் சரிசெய்யப்பட்டன.


இது மிக நுட்பமான மற்றும் சிறந்த மருத்துவத் திறமையைத் தேவைப்படும் அறுவை செயல்முறை யாகும். இந்த சிகிச்சையினால் மிகச்சிறிய அறுவை புண் மற்றும் குறைந்த பின் காய வலி, தோற்று நோய் அபாயம் குறைவு, குறைந்த இரத்த இழப்பு மற்றும் இரத்தம் செலு த்தும் தேவையின்மை வேகமான உடல்நல மீட்பு மற்றும் வாழ்க்கைக்குத் திரும்புதல் ஆகிய நன்மைகள் உள்ளது. இந்த சிகிச்சைகள் அனு மருத்துவ மனையில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருககிறோம்.


அனு மருத்துவம னையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு, நவீன மருத்துவ முறைகளை தொடர் ச்சியாக அறிமுக ப்படுத்தி நோயாளிகளுக்கு தகுந்த அக்கறையோடு தரமான சேவையை வழங்கி வருகிறது, தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்ட மக்களுக்கு உயர்தர இதய சிகிச்சைகளை குறைந்த செலவில் பெற இயலுமாறு செயற்படுவதே எங்கள் நோக்கம் என கூறினர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%