புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனிதப் பயணம் செய்ய விண்ணப்பம் வரவேற்பு: சென்னை கலெக்டர் அறிவிப்பு
Aug 11 2025
11

சென்னை, ஆக. 9–
புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த்ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் னித பயணம் மேற்கொள்பவர்களுக்கு இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை–01–ல் ஆறாவது தளத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம்.
மேலும், http://www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம் முதல்தளம், சேப்பாக்கம், சென்னை–05 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?