அன்புடையீர்,
வணக்கம். 4.9 .25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு என்ற செய்தி பலருக்கும் தித்திப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒரு அற்புதமான செய்தி. இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
இன்றைய திருக்குறளை பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் என்ற வேலூரில் நடந்த அந்த ஆன்மீக செய்தி மிகவும் அருமை பாராட்டுக்கள்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் வந்த குடலை வலுப்படுத்தும் புளித்த உணவுகள் என்று என்ன சாப்பிட்டால் நமக்கு என்ன நன்மை என்று மிக அருமையான தகவலை சொன்னது பாராட்டுக்குரியது. தொழிலாளி பலி போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல் என்ற திருவள்ளூரில் நடந்த அந்த செய்தியை படத்துடன் படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது .
108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு என்று டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த செய்தி நடந்ததை நேரில் பார்ப்பது போல ஒரு உணர்வு வந்தது. மின் ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன் பணம் ரூபாய் 20,000 ஆக உயர்வு என்ற செய்தி மிகவும் அருமை அருமையான தகவல் பாராட்டுக்கள் .
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த வி. கல்யாண சுந்தரனார் வரலாறு மிகவும் அருமை அதை படிக்கும்போது நல்ல வரலாற்று செய்தியாக மனநிறைவை தந்தது உண்மை.
பல்சுவைக் களஞ்சியம் பகுதியில் வந்த கால் வலிக்கு குட்பை சொல்லுங்க என்ற செய்தி அனைவருக்கும் பயனுள்ள தகவல் இன்று பலரும் கால் வலியால் அவதிப்படுகிறார்கள் அதை உணர்ந்து நல்ல தகவலை சொன்னது பாராட்டுக்குரியது. வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா என்ற செய்தி படித்து அதிசயமாக இருந்தது.
வாங்க சம்பாதிக்கலாம் என்று எப்படி நாம் வளர்ச்சியினை செய்து கொள்ளலாம் என்ற அருமையான முன்னுதாரணமாக பல செய்திகளை சொன்னது சுய தொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை என்று மதுரையில் நடந்த அந்த படங்களையும் செய்தியும் படிக்கும் போது புல்லரித்தது. மிகவும் நல்ல ஆன்மீகத் தகவல்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பக்குவமாகவும் பிரசூரிப்பது தங்களுக்கு நிகர் தங்களே என்று பாராட்ட தோன்றியது.
முதுமலை தெப்பக்காடு யானை முகாம் அதன் சிறப்புகளும் என்று மிக அருமையான தகவல்களை படித்தவுடன் யானைகளை நேரில் பார்ப்பது போல ஒரு மன நிறைவு வந்தது. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஐந்தாம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தேவை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நல்ல தகவல் பாராட்டுக்கள்.
சென்னை விமான நிலையத்தில் போலி நகை ஏற்றுமதி செய்து ரூபாய் ஆயிரம் கோடி முறைகேடு என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. தங்கம் விலை உயர்வதை படித்தவுடன் தங்கம் வாங்க வேண்டுமா என்ற ஒரு யோசனையை உண்டாக்கியது.
சத்தீஸ்கரில் சபரி ஆற்றில் தத்தளித்த வரை பத்திரமாக மீட்ட விமானப்படை ஹெலிகாப்டர் என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது. கன்னடம் தெரியுமா என்று சித்தர் அமையாவின் கேள்விக்கு முர்மு அவர்கள் பதில் சொன்னது அருமையான தகவல் பாராட்டுக்கள்.
இந்தியாவுடன் இருக்கும் நல்ல உறவை ட்ரம்ப் அவர்களின் ஈகோ அழிக்க முடியாது அதை அனுமதிக்கவும் மாட்டோம் என்று அமெரிக்க எம்.பி.ரோ கன்னா அவர்கள் சொன்னதை படித்தவுடன் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் நன்கு புரிந்தது.
ஒவ்வொரு பக்கத்திலும் புதிய தகவல்களும் புதிய படங்களும் அழகான செய்திகளும் கொடுத்து விடியலை உற்சாகமாக தொடங்க உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின் அயராத பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்