ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆலய ஜீர்னோ தாரண அஷ்ட பந்தன ரஜத பந்தன மஹா கும்பாபிஷேக விழா

சென்னை 04.09.2025 திருவள்ளூர் மாவட்டம் திருவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆலய ஜீர்னோ தாரண அஷ்ட பந்தன ரஜத பந்தன மஹா கும்பாபிஷேக விழா கோமாதா பூஜையுடன் .வித்ய விநாயகர், ஐயப்பன், சிவபெருமான், வெங்கடாஜலபதி, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், துர்க்கை, பைரவர், சத்யநாராயணன் மற்றும் நவகிரகங்களும் ஆகிய சன்னதிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா கும்பாபிஷேக ஐயர் S. சித்தநாதசரவண சிவம், கோயில் புரோகிதர் ஸ்ரீ E. பாஸ்கர சாமி அவர்களால் அபிஷேகங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்காரங்கள், ஹோமங்களும், பூஜைகளும், மேளதாளத்துடன் , மந்திரங்கள் ஒலிக்க, பிரசாதங்களுடன் மஹாதீபாரதனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவினை ஏற்பாடு செய்தவர்கள்.K.K.திரிநாத் குமார் அவர்கள்,Dr. D. ரவிச்சந்திரன் Ho ny சேர்மன் அவர்கள் வாசவி சபா தலைவர் ஸ்வர்ணா சதீஷ் அவர்கள், செயலாளர் D. வாசுதேவன் அவர்கள், பொருளாளர் K.ஜெயக்குமார் அவர்கள். மற்றும் ஆர்ய வைஸ்ய உறுப்பினர்கள் மற்றும் ஆர்ய வைஸ்யர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டி அருள் பெற்றனர் மிகவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?