tamilnadu epaper

அன்னை சாரதா தேவி பிறந்தநாள் டிசம்பர் 22..

அன்னை சாரதா தேவி பிறந்தநாள் டிசம்பர் 22..

 

 

  புனித அன்னை என்று அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் துணையான சாரதா தேவியார் கல்கத்தாவில் ஜெயராம் பாடி எந்த கிராமத்தில் ராமச்சந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி இருவருக்கும் மகளாக 1 8 5 3 ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி பிறந்தார். 

ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு வயது 23 சாரதா தேவியாருக்கு வயது 5 அந்த காலத்திலேயே இந்த திருமணம் நடந்தது. . தன் தாய் வீட்டில் இருந்த சாரதா தேவியார் தன் கணவரை பிறர் மனநிலை சரியில்லாதவர் என கேலி செய்ததால் கணவன் இருக்கும் இடத்திற்கு சென்று சேர்ந்தார். அவரின் ஆன்மீகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தியானம் செய்வதிலும் தவம் செய்வதிலும் தன் கவனத்தை செலுத்தினார். இவர்கள் கணவன் மனைவியாக வாழாமல் தந்தை மகள் போன்று குரு சிஷ்யை போன்றும் இருந்தனர். . ராமகிருஷ்ணர் அவர்கள் தன் மனைவி பற்றி சொல்லுகின்ற போது அவரை பராசக்தியின் வடிவமாக பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் அவர்கள் அன்னை சாரதா தேவி பற்றி குறிப்பிடும் போது அன்னை ஸ்ரீ சாரதா தேவி நினைத்தால் என் போன்று 100 விவேகானந்தர்களை உருவாக்க முடியும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. . ஸ்ரீ ராமகிருஷ்ணர் மறைவிற்குப் பின் அன்னையின் பணி ஆன்மீகப் பணிகளும் தியானப் பணிகளும் அதிகரித்தன. . புத்தகயா சென்றவர் அங்கிருந்து இறைவனிடம் வேண்டி ராமகிருஷ்ண பக்தர்கள் பிச்சை எடுக்காமலும் வீதிகளில் ரோடுகளில் தங்காமலும் இருக்க அருள் புரிய வேண்டும் என வேண்டினார். அவரின் வேண்டுதல் இன்று சிறப்பாக நிறைவேறி பல்வேறு ராமகிருஷ்ண மடங்கள் அமைந்திருக்கின்றன. . இவர் படிக்கவில்லை என்றாலும் படிப்பின் மீது இருக்கின்ற ஆர்வத்தால் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார். சகோதரி நிவேதிதா மறைவுக்குப் பின் அவர் நடத்தி வந்த பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்திட ஆவண செய்தார். . இவரை சங்க ஜனனி என்று சிறப்பித்துக் கூறுவார்கள். . ஏனென்றால் ராமகிருஷ்ணருடைய மடங்கள் இன்று சிறப்பாய் செயல்பட இவர் காரணமாவார். . தன்னுடைய 66 வது வயதில் காய்ச்சல் காரணமாக1920 ஆண்டு ஜூலை திங்கள் இருபதாம் நாள் இறைவனடி சேர்ந்தார். .. இவரின் ஆன்மீக பற்றும் தியான வாழ்க்கையும் ஒழுக்க வாழ்க்கையும் அனைவராலும் போற்றப்படுகிறது. . 

இவரின் மணிமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம். . 

 

      விடாமுயற்சியுடன் எந்த செயலை செய்தாலும் நிச்சயம் வெற்றியை பெறுவீர்கள். . 

 

    பயம் வேண்டாம். இறைவன் உங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். 

 

   எந்த மனிதரும் எப்போதும் துன்பத்திலேயே இருக்க முடியாது. 

   வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்ல எண்ணங்களை செயல்படுத்த வேண்டும். 

    தத்துவ ஆராய்ச்சியை வறட்டு வாதத்தை விட்டு விலகி இறைவனை அடைய பாருங்கள். 

 

   தூய மனம் கொண்டதால் எல்லாமே தூய்மையாக மாறிவிடும். 

 

  உலகிற்கு கடவுளின் கருணைத்தன்மையை எடுத்துக்காட்டவே நான் வந்திருக்கிறேன். . 

  குழந்தைகளே கவலைப்படாதீர்கள் இறைவன் எப்போதும் உங்களைக் காப்பார். . 

 

அன்னை சாரதா தேவியின் வாழ்க்கை செயல்பாடுகள் அனைத்துமே இந்திய பெண்களின் உயர்ந்த பண்பாட்டின் அடையாளங்களாக திகழ்ந்தவை. அன்னை சாரதா தேவி பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுவோம் வாழ்த்துவோம் வளம் பெறுவோம். 

 

-ந. சண்முகம்

நந்தினி பதிப்பகம் திருவண்ணாமலை.