பெயர்:திருவள்ளுவர்
1)திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார்.
2) திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இவர் பிறந்த ஆண்டாக பொ.ஊ.மு 31ஐ அறிவித்து, அதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறது.
3)திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:
•தேவர்
•நாயனார்
•தெய்வப்புலவர்
•செந்நாப்போதர்
•பெருநாவலர்
•பொய்யில் புலவர்
•பொய்யாமொழிப் புலவர்
•மாதானுபங்கி
•முதற்பாவலர்.
4) மேலும் இவரை,
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என பாரதியாரும்,
"வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே"
என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
5)இந்தியாவின் தென் கோடியில் மு.கருணாநிதி ஐயாவின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது.சென்னையில் வள்ளுவர் நினைவாக வள்ளுவர் கோட்டம் என்ற நினைவிடம் ஒன்று தமிழ்நாடு அரசால் 1973-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.1960இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.