" சரவணன் நல்ல வேலையில் இருந்தான் .நல்ல வருமானம். சரவணனுக்கு இரண்டு அண்ணன் ஒரு அக்கா உண்டு. சரவணன் நார்மல் பாடி கொஞ்சம் கலை, அழகுடன் இருந்தான் .
நல்ல வேலை என்பதால் சரவணனுக்கு திருமணம் செய்து வைத்திட அண்ணன், அக்கா , குடும்பம் வெகுவாக முயற்சி எடுத்தது . சரவணன் தாய் தந்தை வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டதால் கடமையை செய்திட இரு குடும்பமும் முன் வந்து களத்தில் இறங்கியது .
சரவணன் பெண் பார்க்க போகும் இடம் எல்லாம் பெண்ணுக்கு கண் கோணல் , வாய் சரி இல்லை , மூக்கு தூக்கல் , நடை தாங்கல் என்று நூறு பெண்ணுக்கு மேல் காரணம் எதாவது ஒன்று சொல்லி தட்டிக் கழித்து விட்டான் .
பெண் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டான் .
அண்ணன் குடும்பம் , அக்கா குடும்பம் வெறுத்துப் போனது . இதற்குள் சரவணன் வயது நாற்பதை தாண்டியது . கோபம் உச்சம் தொட அண்ணன் குடும்பமும் , அக்காள் குடும்பமும் ஒதுங்க்கிக் கொண்டது .
அக்காள் கணவர் இறந்து விட அக்காள் தன் மகளுக்கு திருமணம் செய்து விட்டு மகளோடு நகர்ந்து விட்டாள்.
அண்ணன் குடும்பம் சரவணனை அழைப்பதையும் அவனோடு பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர் .
சரவணன் வயது ஐம்பதை நெருங்கியது . மனதில் பயம் உடலில் ஒரு வித நடுக்கம் , வாழ்க்கையில் ஏக்கம் , ஒரு மாதிரி விரக்தி என கவ்விக் கொண்டது .
இனியும் தவற விடக் கூடாது வாழ்க்கைத் துணை என்பது இறுதி காலத்தில் வேண்டும் என்று யோசித்தான் சரவணன் . தான் செய்த தவறுக்கு பரிகாரம் தேட நினைத்தான் ஒரு வழியாக .
ஐம்பது வயதில் கணவனால் கைவிடப்பட்ட குழந்தையோடு இருந்த பெண்ணை பார்த்து தானே திருமணம் செய்து கொண்டான் சரவணன் . புது வாழ்க்கையை மன நிறைவோடு தொடங்கினான் சரவணன் .
அழகும் இளமையும் அழியும் தேயும் பொருள், நல்ல மனமும் விட்டுக் கொடுத்து போகும் குணமும் தான் அவசியம் என்பது புரியாமல் எத்தனை சரவணன்கள் தடுமாறி தவிக்கிறார்கள் பாருங்கள் உணருங்கள் ...."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.