இடிந்த வீடுகளின்
உட்புறத்தில்
உதிரியாய் தொங்கிக்கிடந்த
க
சிமென்ட் படிவங்கள்..
ஆங்காங்குவெடிச்சப்தம்
மரண ஓலம்..
பேரிருள்
பேரொலி
பெருஞ்சேதம்..
போரின் சமாதனம்
எங்களுக்கு புரியவில்லை
அல்லது புரியாமலில்லை..
பின்னரெப்போதேனும்
மீண்டவர்களும் மாளக்கூடும்
இருபக்கமும்..
ஆனால்
ஓய்விலில்லை
எந்த அழகுரலும்..!
-ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்