ஏதோ ஒன்று என்னிடம் பிடிக்கவில்லை;
அவளுக்கு.
என்னவோ தவறுதல்;
என்
பார்வையா?
செயலா?
சமிக்ஞை?
அறியேன்.
அறிந்து செய்யவில்லை.
அதனால் என்ன?
அவளை எனக்கு மிகவும் பிடிக்குமே!
அவள்..
முகம் சுளித்தாலும்,
வார்த்தை கொந்தளித்தாலும்,
அதனால் என்ன;
ஒரு நிமிட மௌனம்
கனத்தில் கரைய,,
எளிதாய் அவளால்
களிப்புடன் பேச முடிய;
அவளுக்கு என்னை
மிகவும் பிடிக்கும்
என்று நான் நினைக்க..
சுபம்! சுபம்!
-சசிகலா விஸ்வநாதன்