அவர்கள்
ஜாக்கெட்டில்
ஜன்னல் தைத்துக்
கொள்ளட்டும்!
நாம்
கண்களுக்கு
கதவு வைத்துக் கொள்வோம்!
அவர்கள்
லோ ஹிப் பில்
சேலை உடுத்தட்டும்!
நாம்
தலை தாழ்த்தி
கடந்திடுவோம்!
அவர்கள்
குனிந்தும்
நிமிர்ந்தும் நிம்மதியாய்
பணி செய்யட்டும்!
நாம்
பணிவோடு
விலகி நிற்போம்!