tamilnadu epaper

இந்தியா குடியரசு நாடாக மாறி 75 ஆண்டுகள் நிறைவு அடைந்தை ஒட்டி சுதந்திர போராட்டம் பற்றிய அரிய தகவல்களை வினா - விடை வடிவில் இதோ ?

இந்தியா குடியரசு நாடாக மாறி 75 ஆண்டுகள் நிறைவு அடைந்தை ஒட்டி சுதந்திர போராட்டம் பற்றிய அரிய தகவல்களை வினா - விடை வடிவில் இதோ ?

 

1.மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்தடைந்த நாள் ? 

*09-01-1915*

2.விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கிய நாள்?

*12.03.1930*

3.சட்ட மறுப்பு இயக்கத்தின் தொடக்கமாக காந்தியடிகள் மேற்கொண்ட போராட்டம் எது? *உப்பு சத்தியாக்கிரகம் (அ) தண்டி யாத்திரை*

4.மாகத்மா காந்தி தனது போராட்டங்களில் சத்தியாகிரகம் என்ற தத்துவத்தை முறையாக அறிமுகப்படுத்திய நாடும் நாளும் எது? *தென் ஆப்ரிக்கா, 11-09-1906*

5.இந்திய அரசியல் நிர்ணய சபை முதன்முதலில் கூடிய நாள் எது?

*09-12-1946*

6.டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் சாசன வரைவுக்குழு உருவாக்கிய அரசியல் சாசனத்தை தனது அழகிய கையெழுத்தால் எழுதியவர் யார்?

*பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா*

7."செய் அல்லது செத்து மடி" என்ற மாகத்மா காந்தியின் முழக்கம் இடம் பெற்ற இயக்கத்தின் பெயர் யாது?

*வெள்ளையனே வெளியேறு இயக்கம்.*

8.இந்திய தேசிய கோடியின் மைய பகுதியில் அமைந்துள்ள அசோக சக்கரம் எந்த நினைவு சின்னத்தில் இருந்து எடுக்கப்பட்டது?

*சாரநாத்தில் உள்ள அசோகத்தூண்.*

9.1931 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட கொடிக்குழுவின் தலைவர் யார்?

*சர்தார் வல்லபாய் படேல்.*

10.வட்டமேசை மாநாடுகள் எந்த அறிக்கை அடிப்படையில் நடைபெற்றது?

*சைமன் குழு அறிக்கை*

11."ஜெய்ஹிந்த்" என்ற முழக்கத்தை இந்திய விடுதலை வேள்வியில் முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?

*செண்பகராமன்*

12.காந்தியடிகள், 1921 ஆம் ஆண்டு தமிழகத்தில் தனது உடை பழக்கத்தை அரை ஆடை நடைமுறைக்கு மாற்றிக்கொண்ட இடமும், நாளும் எது?

*மதுரை, செப்டம்பர் 22*

13.நாட்டின் விடுதலைக்கு முன்னர் இரட்டை ஆட்சி முறை எந்த அறிக்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது?

*மாண்டேகு செம்ஸ்ஃபோட் அறிக்கை*

14.1922ல் மாகத்மா காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற காரணமாக இருந்த நிகழ்வு எது?

*சௌரி சௌரா நிகழ்வு*

15.1927 ல் சைமன் குழுவை புறக்கணிப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் எது?

*சென்னை*

16.உப்பு சத்தியாக்கிரகம் தமிழகத்தில் தொடங்கிய மற்றும் நிறைவடைந்த இடங்கள் யாவை? 

*திருச்சி முதல் வேதாரண்யம் வரை*

17.பூரண சுதந்திரத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடமும் ஆண்டும் எது? *லாகூர், 1929*

18.1857 முதலாம் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?

*சார்லஸ் ஜான் கானிங் பிரபு*

19.இந்திய அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சாசனம் நிறைவேறிய நாள் எது? *26 -11 -1949*

20.1946 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்ட நாள் எது? 

*டிசம்பர் 6*

21.டாக்டர் B.R. அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசன வரைவு குழுவில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் இருவர் பெயரை கூறவும்.

*அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்* & 

*N. கோபாலசுவாமி ஐயங்கார்.*

22.இந்திய அரசு சட்டம் 1919ன் வாயிலாக மதராஸ் மாகாண சட்டசபை தொற்றுவிக்கப்பட்டு முதலாவதாக கூடிய நாள் எது? *09.01.1921*

23.இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அதிலிருந்த மொத்த பிரிவுகள் எத்தனை? 

*395 பிரிவுகள்*

24.சுதந்திர இந்தியாவின் முதலாவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்று முதல் என்று வரை நடைபெற்றது?

*25.10.1951 முதல் 21.02.1952 வரை.*

25.இந்திய அரசியல் நிர்ணய சபையால், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

*G.V.மாவ்லங்கார்.*

26.இந்திய அரசியல் நிர்ணய சபையால், அடிப்படை உரிமைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட துணைக்குழுவின் தலைவர் யார்?

*J.P.கிருபளானி.*

27.டிசம்பர் 11, 1946ல் இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

*டாக்டர் ராஜேந்திர பிரசாத்.*

28.1950 ஜனவரி 24ல் டில்லியில் அரசியல் சாசனத்தில் கையெழுத்திட மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்?

*284 பேர்*

29.இந்திய அரசியல் நிர்ணய சபையால், மொழிகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

*மொட்டூரி சத்யநாராயணா*

30.டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசன வரைவுக் குழுவில் அவரையும் சேர்த்து மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்? *ஏழு பேர் (7)*

31.இந்திய அரசியல் சாசன நாள் என்று கொண்டாடப்படுகிறது? *நவம்பர் 26*

32.சுதந்திர இந்தியாவின் தேசியக்கொடிக்கு, அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் வழங்கி நாள் எது?

*22.07.1947*

33.இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க அதன் வரைவுக்குழு எடுத்துக்கொண்ட காலம் எவ்வளவு? 

*2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்.*

34.சுதந்திர போராட்டத்தில் புகழ்மிக்க ராணி வேலு நாச்சியாரின் ஆட்சி காலம் எது? *1780 - 1790*

35.புகழ்மிக்க சம்பாரண் சத்தியாகிரக இயக்கத்துடன் தொடர்புடைய பயிர் யாது? *அவுரி எனப்படும் இண்டிகோ பயிர்*

36.ஆங்கிலேய ஆட்சியின் போது இந்திய தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு எது? 

*1931 ஆண்டு*

37.விடுதலை போராட்ட வீராங்கனை குயிலி செயல்பட்டு வந்த பகுதி யாது? *சிவகங்கை.*

38.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று டெல்லி செங்கோட்டையின் எந்த வாயிலில் தேசிய கொடியை ஏற்றினார்? 

*லாஹூரி நுழைவாயில்.*

39.சுதந்திர இந்தியாவின் முதலாவது நாடாளுமன்ற மக்களவைத் கூட்டத் தொடர் தொடங்கிய நாள் எது? *13.05.1952*

40.மாநிலங்களவைத் தலைவராகிய குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 

*5 ஆண்டுகள்.*

41.இந்தியாவில் முதன் முறையாக நிறுவப்பட்ட மாநகராட்சி எது? *சென்னை*

42.நாட்டின் நிதி தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் எந்த அவையில் நிறைவேற்றப்படுவது கட்டாயமாகும்? *மக்களவை*

43.இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு எது? *1950*

44.இந்தியாவில் சோதனை அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட ஆண்டு எது? *1982*

45.அரசியல் சட்டத்தின் எந்த திருத்தத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அரசியல் சாசன அங்கிகாரம் வழங்கப்படுகிறது? 

*73 & 74 வது அரசியல் சாசன திருத்தம்.*

46.அந்தமான், லட்சத்தீவு உட்பட இந்தியாவின் மொத்த கடற்கரை நீளம் என்ன? *7516.6 கி.மீ*

47.இந்திய அரசியல் சாசனத்தின்படி 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகளின் எண்ணிக்கை எத்தனை? *22*

48.புதுடெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அமைச்சகம்? *பாதுகாப்பு அமைச்சகம்.*

49.விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக சுதேச இயக்கம் அறிவிக்கப்பட்ட நாள் எது? *07-08-1905*

50.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்திய அரசு சட்டம் 1935 க்கு பதிலாக இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட மிக முக்கிய சட்ட ஆவணம் எது?

 *இந்திய அரசியலமைப்பு சட்டம்*

51.பாபா சாகேப் அம்பேத்கர், 1942 முதல் 1946 வரை, பிரிட்டிஷ் வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் எந்தத் துறைக்கு பொறுப்பு வகித்தார்? 

*தொழிலாளர் நலத்துறை*

52.இந்திய அரசியல் சாசனத்தின் அதன் மைய கருத்துக்களைப் பிரதிபலிக்கும் பகுதி யாது? *முகவுரை*

53.இந்தியக் குடியரசுத் தலைவருக்காக டெல்லிக்கு வெளியே, அலுவலக மாளிகைகள் அமைந்துள்ள இரு நகரங்கள் யாவை? *ஐதராபாத், சிம்லா*

54.நாட்டின் வரி வருவாயை மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்துகொள்வதற்கான பரிந்துரை வழங்கும் அமைப்பு யாது? *நிதி குழு*

55.வேலூர் புரட்சி நிகழ்ந்த ஆண்டு எது? *1806*

56.இந்தியாவில் முதன் முதலாக நாடுமுழுவதும் செல்லத்தக்க அஞ்சல் தலை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு எது? *1854*

57.வந்தே மாதரம் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது? 

*அனந்த மடம்*

58.ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவிக்கும் தீர்மானம், அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட நாள் எது? *24.01.1950*

59.விடுதலைப் போராட்டத்தின் போது, காங்கிரஸ் மாநாட்டில், 'ஜன கண மன' பாடலை முதலில் பாடப்பட்ட நாள் எது? *27.12.1911*

60.ஜன கண மன பாடல், முதலில் எந்த இதழில் வெளியானது? 

*தத்வபோதினி பத்ரிகா*

61.தமிழகத்தில் இயங்குகின்ற, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரயில் சேவை எது? *நீலகிரி மலை ரயில்*

62.சுதந்திர இந்தியாவின் முதலாவது துணை பிரதமர் யார்?

 *சர்தார் வல்லபாய் படேல்.*

63.இந்தியக் கடற்படை அப்பெயர் பெற்ற நாள் எது? *26.01.1950*

64.குஜராத்தில் புகழ்மிக்க பர்தொலி வரிகொடா இயக்கத்திற்கு தலைமை வகித்தவர் யார்? 

*சர்தார் வல்லபாய் படேல்.*

65.ஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கியவர் யார்? 

*அன்னிபெசண்ட் அம்மையார், லோக்மான்ய திலகர்*

66.இந்தியக் கொடியை வெளிநாட்டில் முதன் முதலாக 1907 ஆம் ஆண்டு ஏற்றிய வீராங்கனை யார்? 

*பைகாஜி காமா அம்மையார்.*

67.பெண் கல்வியை ஊக்குவிக்க அரிய மகிளா சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்? *பண்டித ரமாபாய்.*

68.இந்தியாவில் முதலாவது பெண் ஆசிரியரும் பெண்களுக்கான பல பள்ளிகளை தோற்றுவித்தவருமானவர் யார்? *சாவித்ரிபாய் பூலே*

69.சமூக சேவகர்" மகாத்மா ஜொதிராவ் புலே நிறுவிய சமூக சீர்திருத்த அமைப்பின் பெயர் என்ன?

*சத்யஷோதக் சமாஜம்.*

70.1885 ல் நடைபெற்ற முதல் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தது யார்?

*W.C.பானர்ஜி*

71.சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்ட "ஆபரேஷன் போலோ" நடவடிக்கை மூலம் 1948ல் இந்தியாவுடன் இணைந்த சமஸ்தானம் எது? *ஹைதராபாத்.*

72.பாதுகாப்பு படைகளுக்கான மிக உயரிய தீரச்செயல் விருதாகிய பரம் வீர் சக்ரா விருது பெற்ற முதல் வீரர் யார்? *மேஜர் சோம்நாத் ஷர்மா.*

73.இந்திய தேசிய கொடியின் நீளம் மற்றும் அகிலத்தின் விகிதாசாரம் என்ன? *3:2*

74.இந்திய கடற்படையின் முதல் இந்திய தளபதி யார்?

*வைஸ் அட்மிரல் R.D.கட்டாரி.*

75.மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக போற்றப்படுபவர் யார்? *கோபால கிருஷ்ண கோகலே*

76.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய காங்கிரஸின் அங்கமாக, ஃபார்வர்ட் பிளாக் அமைப்பை உருவாக்கிய நாள் எது? *03.05.1939*

77.விடுதலை போராட்டத்தின்போது டெல்லி செல்வோம் என்ற பொருள்படும் 'டெல்லி சலோ' முழக்கத்தை முன்வைத்த தலைவர் யார்?

*நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.*

78.நாட்டின் இடைக்கால பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த விடுதலை போராட்ட வீரர் யார்? *குல்சாரிலால் நந்தா*

79.தேசபந்து என போற்றப்படுபவரும் சுயராஜ்ய கட்சியை நிறுவியவருமான சுதந்திர போராட்ட தலைவர் யார்? *சித்தரஞ்சன் தாஸ்.*

80.விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் எழுப்பிய இரு வார்த்தையில் அடங்கிய புகழ்மிக்க முழக்கம் யாது?

*"இன்குலாப் ஜிந்தாபாத்"*

81.பாபாசாஹேப் அம்பேத்கர், 1942 ஆம் ஆண்டு முதல் 1946 ஆண்டு வரை அரசு நிர்வாகக் குழுவில் எந்த துறைக்கு ‌ பொறுப்பு வகித்தார்? 

*தொழிலாளர் நலத்துறை.*

82.நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னோட்டமாக 1946ல் இடைக்கால அரசு அமைக்கப்பட்ட நாள் எது ? *02.09.1946*

83.சத்தியாக்கிரக போராட்டத்தை பிரிட்டிஷார் அடக்கிய விதம் குறித்து எழுதி, உலக நாடுகளின் கருத்தை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக மாற்ற உதவிய அமெரிக்க பத்திரிகையாளர் யார்? *வெப் மில்லர்.*

84.ஆந்திர கேசரி என போற்றப்படும் விடுதலை போராட்ட வீரர் யார்?

*டி.பிரகாசம்*

85.சுதந்திர இந்தியாவின் முதல் சுகாதாரத் துறை அமைச்சராக சேவையாற்றிய விடுதலை போராட்ட வீராங்கனை யார்?

*ராஜகுமாரி அம்ரித் கௌர்*

86.1757 பிளாசி போரில் கிழக்கிந்தியக் கம்பெனி படைகளுடன் போரிட்ட இந்திய மன்னர் யார்? 

*சிராஜ்-உத்-தௌலா.*

87.நாட்டின் முதலாவது சுதேச அறிவியல் இயக்கமான Indian Association for the cultivation of Science ஐ நிறுவியவர் யார்? *டாக்டர் மகேந்திர லால் சர்கார்.*

88.அரசியல் அமைப்பு சட்டத்தின்படி குடியரசுத் தலைவர் தேர்தலை ஒருங்கிணைத்து நடத்துவது நாடாளுமன்றமா இந்திய தேர்தல் ஆணையமா? 

*இந்திய தேர்தல் ஆணையம்.*

89.குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெறாத சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? *நியமன உறுப்பினர்கள்.*

90.குடிமக்களின் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ள அரசியல் சாசனப்பிரிவு யாது? *பிரிவு 51A*

91.மகாத்மாகாந்தி தனது வாழ்க்கை தத்துவத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் The Kingdom of God is Within You என்ற நூலில் ஆசிரியர் யார்?

*லியோ டால்ஸ்டாய்*

92.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தொடங்கப்பட்ட நாள் எது? *15.08.1969*

93.இந்தியா இந்தியர்களுக்கே என்று முதலில் குரல் கொடுத்தார் யார்? *சுவாமி தயானந்த சரஸ்வதி.*

94.குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் யார்? 

*நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் & நியமன உறுப்பினர்கள்.*

95.எல்லை காந்தி என அழைக்கப்பட்டவர் யார்? 

*கான் அப்துல் கப்பார் கான்.*

96.இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ள இரு நகரங்கள் யாவை? *சென்னை, கயா.*

97.இந்திய அரசியல் சாசனத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் எண்ணிக்கை என்ன? *105* (2022 ஆண்டு ஆகஸ்ட் வரை)

98.இந்திய கடற்படைகாக உள்நாட்டிலேயே கட்டப்பட்டு வரும் விமான தாங்கி கப்பல் எது? *INS விக்ராந்த்*

99.1927 ல் சைமன் குழுவை புறக்கணிக்கவும், தனி அரசியல் சாசனம் தயார் செய்யும் தீர்மானிக்கப்பட்ட இடம் யாது? *சென்னை.*

100. 1971 ஆம் ஆண்டு இந்திய கடற்படை பாகிஸ்தானின் 4 போர் கப்பல்களை முழ்கடித்த நாள் எந்த தினமாக கொண்டாடப்படுகிறது?

*இந்திய கடற்படை தினம்*

101. கார்கில் போரில் வெல்வதற்கான இந்திய ராணுவ நடவடிக்கையின் பெயர் யாது? *ஆப்ரேஷன் விஜய்*

102. மலத்தீவை கைப்பற்றிய முயன்ற அந்நிய குழுவிடமிருந்து அந்நாட்டை காக்க இந்தியா மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கையின் பெயர் யாது? *ஆப்ரேஷன் காக்டஸ் லில்லி*

103.இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாம் பொக்ரான் அணுசோதனைகளின் சங்கீத பெயர்கள் யாவை? *சிரிக்கும் புத்தர் & சத்தி*

104.நாட்டின் முதல் சுதந்திரத்தை முன்னிட்டு, அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அளித்த புகழ்மிக்க உரையின் பெயர்? 

*Tryst with Destiny*