tamilnadu epaper

உறவுகள்

உறவுகள்

பையனுக்கு பொண்ணு பார்க்க போனாங்க..

 

பெண் வீட்டில் நடந்த பேச்சு வார்த்தை..

 

வாங்க எல்லோரும் வாங்க... உட்காருங்க..

 

ஆமா. மாப்பிள்ளைக்கு பக்கத்தில வெள்ளெழுத்து கண்ணாடி போட்டு தாடிலாம் வச்சிருக்காரே அவரு யாரு.

 

அவரு மாப்பிள்ளையோட சின்ன அண்ணன் ங்க. சித்தப்பா பையன்.

 

ஓகோ.

 

இந்த பக்கம் மஞ்சள் சட்டை போட்டு உட்கார்ந்து இருக்காரே அவரு...

 

அவரு பெரிய அண்ணன் ங்க.. பெரியப்பா மகன்.. பெரியவர் என்று காட்டுவதற்காக உயரமான பெரிய இடத்தில தான் உட்காருவாரு.

 

சரிங்க சரி.

 

சரி, மாப்பிள்ளை பக்கத்தில கருப்புக் கண்ணாடி போட்டு கம்பீரமா ஒருத்தர் இருக்காரே அவரு யாரு.

 

அவரு மாப்பிள்ளையோட மாமாங்க., அக்கா புருஷன். அவரு ஓகே சொன்னாத்தான் மாப்பிள்ளை கல்யாணத்துக்கே ஒத்துக்குவாரு..

 

ஓ ..அப்புடியா ..

 

மாப்பிள்ளை என்ன பண்றார்..

 

மாப்பிள்ளை சொந்தமா பிஸ்னஸ் பண்றார்...

 

மாப்பிள்ளை க்கு எதுவும் கெட்ட பழக்கம்.. அப்படி ஏதாவது..

 

ச்சே ச்சே... மாப்பிள்ளை சொக்கத் தங்கம் ங்க..அவரு பீடி சிகரெட் கூட தொடமாட்டார்.

சுத்த டீ டோட்லர்.

நீங்க எங்க தேடுனாலும் இப்புடி ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரு.

 

வேணும்னா நீங்க வந்து நல்லா விசாரிச்சுக்கோங்க.

 

அதெல்லாம் எதுக்குங்க.. மாப்பிள்ளையை பார்த்தாலே தெரியுது.. எங்க பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ..

 

நாங்க ஒரு நியூக்ளியர் ஃபேமிலி எங்களுக்கு சொந்தபந்தம் எதுவும் கிடையாது . அதனால எங்களுக்கு அதுல ஒரு லயிப்பு. மாப்பிள்ளை வீட்டில் இத்தனை சொந்தங்கள் இருப்பது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உறவுகள் நிறைய இருக்கும் இடத்தில் தான் என் பெண்ணை தர வேண்டும் என்று நான் நினைத்தேன். கடவுள் எங்களுக்கு அதுபோலவே வழிகாட்டி விட்டார். அப்புறம், தட்ட எப்ப மாத்தலாம்னு நீங்க தான் சொல்லணும் ..

என்றார் பெண்ணின் அப்பா.

 

ஆர். சுந்தரராஜன் 

சிதம்பரம்