tamilnadu epaper

ஊக்கமும் ஆர்வமும்

ஊக்கமும் ஆர்வமும்

 

 

       " புதிதாக திருமணம் ஆன கலைவாணன் ஆறு மாதம் ஆன பிறகு சுனக்கமாக தன் அம்மா வீட்டுக்கு வந்தான்.

 

       அம்மா ராஜாத்தி முகத்தை பார்த்ததும் கண்டுபிடித்து விட்டாள் . என்னடா பிரச்சனை என் மருமகள் சுமதி எங்கடா என்றாள் .

 

       அதெல்லாம் எதுவும் இல்லைம்மா சும்மா உன்னையும் அப்பாவையும் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன் என்றால் கலைவாணன் .

 

        உன் முகமே காட்டிக் கொடுக்குது உண்மையை சொல் என்றாள் ராஜாத்தி .

 

          கல்யாணம் ஆன புதுசுல சமைக்க தெரியாதுன்னு சுமதி சொன்னா சரின்னு ஆர்டர் கொடுத்து கடையில வாங்கி சாப்பிட்டோம் , இப்பவும் அதுவே நிரந்தரமாகி சம்பள பணம் எதுவும் மிஞ்சாம கரையுதும்மா என்றான் கலை .

 

      சரி குளிச்சிட்டு சாப்பிட வா என்றாள் ராசாத்தி . அப்பா மகன் அம்மா மூவருமா நண்டு குழம்பு , வறுத்த மீன் , இப்படி சுவையா சாப்பிட்டு முடிந்ததும் கலையை ஊருக்கு அனுப்பி விட்டாள் ராசாத்தி தனியாக இருக்கும் சுமதிக்காக .

 

        இரண்டு கழித்து ராசாத்தியும் , அவள் வீட்டுக்காரரும் சுமதி வீட்டுக் போய் இருபது நாள் தங்கினாங்க . சுமதிக்கு மெதுவா சமையல் ஆசையை தூண்டிவிட்டு சமைக்க வைத்தாள் ராஜாத்தி . சமையல் பழகி அசத்தினாள் சுமதி .

 

       அன்று அந்த ஏரியாவில் நாண் வெஜ் சமையல் போட்டி .சுமதியை மெல்ல சீண்டினால் ராஜாத்தி . அவ்வளவு தான் பல வரைட்டியை செய்து காட்டினாள் சுமதி .

 

         நடுவர்க் குழு வந்து டேஸ்ட் பார்த்து வின்னரை அறிவிக்க சுமதி மெய் மறந்து நின்றாள் . இரண்டாம் பரிசு அவளுக்கு நாலாயிரம் ரூபாய் பரிசு பட்டுப்புடவை வேறு . கலைவாணன் சுமதியின் கைப்பக்குவத்தில் சொக்கிப் போனான்.

 

              அன்று மாலையில் ராசாத்தியும் அவள் கணவரும் கிராமத்துக்கு திரும்பினர் . சுமதி இப்போது வீட்டு சமையல் என்கிற பேர்ல கேட்ரிங் செய்து வருமானமும் பார்க்க ஆரம்பத்து விட்டாள் . கலைவாணன் முகம் மலர்ந்து இருந்தது . வருமானமும் இரட்டிப்பானது ..."

 

    - சீர்காழி. ஆர். சீதாராமன்.

       9842371679 .