எங்கள் அரியலூர், அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும். மேலும் இந்தியாவிலே இங்கு தான் நிலத்தடியில் பாறை கற்களை உடைத்து குவாரி சுரங்கம் மூலமாக சுண்ணாம்புக்கல்
மற்றும் பைஞ்சுதை காரையான (சிமெண்ட்) அதிகமாக கிடைப்பதால் அதை மையமாக கொண்டு பல சிமெண்ட் ஆலைகள் இவ்வூரை சுற்றி அதிகமாக உள்ளதால். அரியலூர் சிமெண்ட் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னை 310 கி.மீ. தொலைவில் உள்ளது.
அரி+இல்+ஊர்= அரியிலூர்.
• அரி- விஷ்ணு
• இல்- உறைவிடம்
• ஊர்- பகுதி.
• விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கம்.
• விஷ்ணு (திருமால்) சாந்தி வைணவ வழிபாட்டு திருக்கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
எங்கள் அரியலூருக்கு கிழக்கே சிதம்பரம் 88 கிமீ; தெற்கே தஞ்சாவூர் 45 கிமீ; மேற்கே பெரம்பலூர் 31 கிமீ; வடக்கே விருத்தாசலம் 58 கிமீ; வடகிழக்கே கடலூர் 120 கிமீ; தென்மேற்கே திருச்சி 62 கிமீ; தொலைவிலும் அரியலூர் மாவட்ட எல்லைகளாக அமைந்துள்ளது.
எங்கள் அரியலூர் ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று
அரியலூர் சிமெண்ட் ஆலைகள்
• டான்செம் (TANCEM) (Tamilnadu Cement Corporation Limited). இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
• ராம்கோ சிமென்ட் (Ramco Cement) கோவிந்தபுரம். 1997 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் துவங்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை, தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது (Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
• டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால், 2012 பசுமை விருது (Green Award-2012), 2012 ஆம் ஆண்டிற்கான சிஐஐ வினைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012) ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
• செட்டிநாடு சிமெண்ட் (Chettinad Cement) கீழப்பழூர்.
• அல்ட்ரா டெக் சிமெண்ட் (Ultra Tech Cement) (Adithya Birla Group) ரெட்டிப்பாளையம்.
• இந்தியா சிமெண்ட் (Coromandel King-Sankar Sakthi) தளவை.
கல்லூரிகள்
• அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்.
• அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.
• அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயங்கொண்டம்.
• அரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.
• அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, கீழப்பழுவூர்.
• மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர்.
• விநாயகா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, கீழப்பழுவூர்.
கோயில்கள்
• கோதண்டராமசாமி கோயில், அரியலூர்
• ஆலந்துறையார் கோயில், அரியலூர்
• கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்
பேருந்து போக்குவரத்து
• மாநில நெடுஞ்சாலை 143 - அரியலூர்- துங்கபுரம் - திட்டக்குடி, மாநில நெடுஞ்சாலை 27 அரியலூர் - தஞ்சாவூர் மற்றும் மாநில நெடுஞ்சாலை 139 அரியலூர் - ஜெயங்கொண்டம் மற்றும் மாநில நெடுஞ்சாலை, அரியலூர் - செந்துறை - ஜெயங்கொண்டம் ஆகிய சாலைகள் அரியலூர் வழியாக செல்லும் முக்கிய சாலைகள் ஆகும்.
• விரைவில் திருச்சி - விருத்தாசலம் நெடுஞ்சாலை அமையயுள்ளது. மேலும் இந்த சாலை வழி அமையுமானால் திருச்சியிலிருந்து அரியலூர் வழியாக விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், கடலூர், பாண்டிச்சேரி வரையில் குறுகிய நேர வழி சாலையாக அமையும்.
• அதே போல் தஞ்சாவூர் மற்றும் அரியலூரிலிருந்து விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக சென்னைக்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
• மேலும் இங்கிருந்து சென்னை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், துறையூர், கும்பகோணம், ஜெயங்கொண்டம், பட்டுக்கோட்டை, சிதம்பரம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, விருத்தாச்சலம், திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், பழனி, கன்னியாகுமரி மற்றும் குமுளி ஆகிய இடங்களுக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன