tamilnadu epaper

எங்கள் ஊர் ஆவுடையார்கோவில் சிறப்பு:

எங்கள் ஊர் ஆவுடையார்கோவில் சிறப்பு:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தென்கிழக்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆவுடையார் கோவில். திருவாசகப் பாடல்கள் அனைத்திலும் இந்த ஊரானது திருப்பெருந்துறை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இலக்கியங்களில் ஆதி கைலாயம் ,குறுந்த வனம், திருப்பெருந்துறை கோயில், என்று அழைக்கப்படும் இந்த கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சைவ துறவியான மாணிக்கவாசகர் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையது.

                   அப்போது திருவாதவூர் என்று அழைக்கப்பட்ட துறவி அரிமர்த்தன பாண்டியன் என்னும் அழைக்கப்படும் இரண்டாம் வரகுண வர்மன் என்ற பாண்டிய மன்னனின் அவையில் இருந்ததாகவும் ,அருகில் உள்ள கடற்கரை நகரத்திற்கு வரவிருந்த சில குதிரைகளை வாங்குவதற்கு சில கணிசமான நிதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .திருவாதவூர் துறைக்கு வந்தவுடன் சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த குரு வேடத்திலிருந்து சிவபெருமானை சந்தித்தார் .அவர் குருவின் ஆளுமையினால் மிகவும் தாக்கப்பட்டார் .அவர் தீட்ஷை பெறுவதற்கு கூறினார். அன்றிலிருந்து அவர் பெயர் மாணிக்கவாசகர் (அவருடைய வார்த்தைகள் நகைகள் மாணிக்கங்கள் )என்று மாற்றம் பெற்றது.பின்னர் அவர் மன்னனின் பணத்தை திருப்பெருந்துறை கோவில் கட்டவும் பிறர் நன்மைகளுக்கும் செலவழித்தார் .மன்னன் குதிரைகள் எங்கே என்று கேட்டதற்கு "ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும்" என்று சொல்ல செய்த சிவபெருமான் அவ்வாறே நரிகளை பரிகளாக்கி அவரே ஒட்டி வந்து மதுரை மன்னனிடம் ஒப்படைத்தார் .அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று அழைக்கப்படுகிறது.

                    ஆனால் இரவிலேயே குதிரைகள் நரிகள் ஆகிய போது மன்னர் மாணிக்கவாசகரை வைகை ஆற்று சுடுமணலில் இருக்கவைத்து தண்டித்தார் .வைகையில் வெள்ளம் வந்தது. இதனால் வெள்ளம் கரையை உடைக்கும் அபாயம் ஏற்பட்டு அணையை அடைக்க வேலைக்கு வந்த சிவபெருமான் பிட்டு வாங்கி தின்றுவிட்டு வேலை செய்யாமல் இருந்தார். அவருக்கு பிரம்படி வழங்கப்பட்டது .அவர் மீது விழுந்த பிரம்படி அங்கு இருந்த எல்லோரும் மீதும் விழுந்தது .அதன் பிறகு வந்தது இறைவன் என்று தெரிந்த பாண்டிய மன்னன் மாணிக்கவாசகர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் அமைச்சராக பணியை தொடர வேண்டினார். துறவி மறுத்து அலைந்து திரியும் சன்னியாசி வாழ்க்கையை தழுவினார்.

                           இந்த இறைவனின் திருவிளையாடல் நடக்க காரணமாய் இருந்த இருந்த இந்த கோவில் ஆத்மநாதராக விளங்குவதால்.. இவர் ஆத்மநாதர் என அழைக்கப்படுகிறார். திருக்கோயில் இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது .

                கொடுங்கைகள்அழகுக்கு பெயர் பெற்ற இந்த கோவில் பண்டைய காலத்தில் ஸ்தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதும் பொழுது ஆவுடையார் கோவில் கொடுங்கைகளைப் போல தங்களால் அமைக்க இயலாது என்பதை குறித்து எழுதினார்கள்.

                            அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள சிவலிங்கம் திருமேனி பானம் ,சக்தி பீடம் ,பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக உள்ளது .ஆனால் இங்கு நடுவில் இருக்கும் சக்தி பீடம் மட்டுமே உள்ளது .அதற்கு மேல் குவளை ஒன்று சாத்தி இருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக ஆத்மநாதர் விளக்குகிறார் .அதனுடைய உருவம் இல்லாத அருவமாக இறைவன் வழங்குகிறார்..என்பதை விளக்கும் வகையில் சக்தி பிரம்மம் மட்டும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் சக்தியை பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது. என்பது தத்துவம் .மூலவருக்கு குடாகமம் உத்தரவாகத்தின்படி பூஜை நடைபெறுகிறது .ஆத்மநாதருக்கு ஆறு கால பூஜையும் புழுங்கல் அரிசி நிவேதனமாக செய்யப்படுகிறது. கைப்படாத பாத்திரத்தில் புழுங்கல் அரிசி சாதத்தை கொண்டு வந்து அதை பீடத்திற்கு நேர் எதிரில் உள்ள கருங்கல் மேடையில் கொட்டி ஆவியோடு நெய்வேத்தியம் செய்வது இந்த கோவிலில் சிறப்பு.

                        கருவறைக்கு மேற்கு யோகாம்பாள் சன்னதி உள்ளது .இதில் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. தாமரை பீடத்தில் அன்னையின் திரு பாதங்கள் வடிவில் மட்டுமே தங்கத்தால் ஆன மந்திர வடிவமாக உள்ளது.அன்னையை முன்புறமுள்ள கல்லிலான ஜன்னல் வழியே தரிசனம் செய்ய வேண்டும் .மற்ற சிவாலயங்களில் கிழக்கு நோக்கி அமர்ந்து மேற்கு நோக்கி இருக்கும் சிவபெருமான் இங்கு ஒரு மூர்த்தமாக சிவபெருமான் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளது இந்த கோயிலின் சிறப்பு.

                   அது மட்டுமல்ல இந்த கோவிலில் இருக்கும் சிற்பங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரும் சிற்பங்களை கண்டு வியந்து போகின்றனர் .தமிழர்களின் சிற்ப கலைக்கு இந்த கோவில் ஒரு உதாரணமாக விளங்குகிறது .

ஆவுடையார் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலாவாக வாருங்கள்.ஆன்மிகம் மட்டுமின்றி கோவிலின் வரலாறு,சிற்பங்களின் கலைநயம் கண்டு நம் பழம்பெரும் பண்பாட்டின் சின்னத்தை உலகமே கண்டு வியக்கும் அழகினை பாருங்கள்.கட்டிடக்கலையில் தமிழரை வெல்ல உலகில் யாருமில்லை என்று பறைசாற்றி வானுயர உயர்ந்து நிற்கும் ஆவுயார்கோவிலின் அழகை விழிகள் விரிய கண்டு ரசியுங்கள்.

   கவி-வெண்ணிலவன்,மணமேல்குடி