tamilnadu epaper

எங்கள் ஊர் இராயகிரி சிறப்புகள்

எங்கள் ஊர் இராயகிரி சிறப்புகள்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் எங்கள் ஊர் ராயகிரி மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே அமைந்துள்ள அழகிய ஊராகும். ஊரைச் சுற்றி பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் வயல் வெளிகளும் எந்த நேரமும்  வீசும் இளந்தென்றல் காற்றும் மனதை ரம்யமாக்கும்.

எங்கள் ஊர் ராயகிரி தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். இந்த ஊரின் வடக்கே சிவகிரி எனும் ஊரும், தெற்கே வாசுதேவநல்லூர் எனும் ஊரும், கிழக்கே கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன. 

 

இராயகிரி பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும், சங்கரன்கோவிலிருந்து 24 கிமீ தொலைவிலும், சிவகிரியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

 

எங்கள் ராயகிரி 8.5 ச.கிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்டுள்ளது. 

 

எங்கள் இராயகிரி பேரூராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 

 

இராயகிரி பேரூராட்சி மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்படி மலையிலிருந்து தோன்றும் ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம் மற்றும் மேலக்கரிசல்குளம் போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது. 

 

ராயகிரியில் ஆண்களின் கல்வியறிவு 72% மற்றும் பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். ராயகிரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். எங்கள் 

 

இராயகிரியில், ஆறு தொடக்கப் பள்ளிகள், ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி மற்றும் இரண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. 

 

1இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு வெ.ராமசாமி நாடார் ஆரம்பப்பள்ளி. 

 

2இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி.பா.ஆதித்தனார் ஆரம்பப்பள்ளி. 

 

3டி.டி.டி.ஏ. துவக்கப்பள்ளி. 

 

4அருணாச்சலா துவக்கப்பள்ளி. 

 

5எஸ்.ஆர்.ஆர் துவக்கப்பள்ளி. 

 

6எம்.எஸ்.பி. துவக்கப்பள்ளி.

 

 

 

 

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்

 

 

 

இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. ஆதித்தனார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி. 

 

.இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி(தமிழ் மற்றும் ஆங்கில வழி)

 

 

• இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு கு காமராஜர் ஆங்கிலப்பள்ளி 

 

• குமுதா நர்சரி மற்றும் ஆங்கிலப்பள்ளி

 

 

 

எங்கள் ஊர் ராயகிரியில் தெற்கு மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது .இக்கோயிலில் காலை,மாலை இரண்டு பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

 

 

ராயகிரிக்கு அருகே நாதகிரி முருகன் கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும்.

 

 

ராயகிரி நாட்டு சக்கரைக்கு புகழ் பெற்றது. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இங்கு குறைந்த விலைக்கு தரமான நாட்டு சக்கரை மூட்டை மூட்டையாக வாங்கி செல்கின்றனர்.