tamilnadu epaper

எங்கள் ஊர், குளித்தலை சிறப்பு.

எங்கள் ஊர், குளித்தலை         சிறப்பு.

குளித்தலை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் உள்ள, குளித்தலை வட்டத்தின் நிர்வாகத் தலைமை இடமும், நகராட்சியும் ஆகும். திருச்சியிலிருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊர்.

 

         திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, கரூரை தலைமை இடமாகக் கொண்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, அம்மாவட்டத்தில் குளித்தலையும் ஒரு வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டது.

 

         குளித்தலை ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். மறைந்த தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், 

1957...ஆம் ஆண்டில் முதன் முதலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

 

பெயர் க் காரணம்:-

 

காவிரி க் கரையோரம்

நன்செய் நிலங்களும், 

மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் கடம்பவனம் என்னும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி" குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர்,

" குளித்தலை " என்றாகியது.

 

போக்குவரத்து வசதி:-

 

குளித்தலை NH 81 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதாலும், திருச்சி மற்றும் கரூர் என்ற இரு மாநகர்களுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், 24 மணி நேர பேருந்து வசதி பெற்ற நகரமாக உள்ளது.

 

              இரயில் நிலையம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையிலேயே உள்ளது. சென்னை, கோவை, காரைக்கால்,

பெங்களூரு, மைசூர்,

மங்களூர், கொச்சின் போன்ற அனைத்து பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து உள்ளது.

 

எல்லைகள்:-

 

             குளித்தலையின் அமைவிட மானது வடக்கில் முசிறி, கிழக்கே பெட்டவாய்த்தலை, தெற்கில் அய்யர் மலை, மேட்டில் லாலாபேட்டை ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும். குளித்தலை சுமார்

11.16 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு நகராட்சி ஆகும்.

 

வழிபாட்டு தலங்கள்:

 

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், 65 ஆவது தேவாரத் தல மாகவும், சோழநாடு காவிரி தென்கரைத்

தலங்களில் இரண்டாவது தலமா கவும் உள்ளது. அப்பர்

இச் சிவாலயத்தை ப்பற்றி பாடியுள்ளார்.

இச் சிவாலயத்தின் மூலவர் கடம்பவன நாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.

 

மூன்று தலங்கள்:-

 

            காலைக் கடம்பர், மத்தியானம் 

சொக்கர், மாலை ஈங்கோய் நாதர் என்பர். காலையில் குளித்தலை கடம்பவனேஸ்வரர், மதியம் அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர், மாலை திருஈங்கோய்நாதர் ஆகிய மூன்று தலங்களில் உள்ள

ஈஸ்வரனை ஒரே நாளில் வழிபட்டால்,

நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கார்த்திகை சோமவாரத்தில் இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர்.

 

           அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோவிலும் நகரத்தின் மையத்தில் உள்ளது.

மூலவர், உற்சவர்

நீலமேகப் பெருமாள்.

தாயார் -- கமலநாயகி.

 

அகண்ட காவிரி:-

 

          கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப்பகுதிகளில், உற்பத்தியாகி " ஆடுதாண்டும் காவிரி" என குறுகிய வடிவில் தமிழ்நாட்டின் எல்லையில் நுழையும் காவிரி ஆறானது குளித்தலை பகுதியில் தான் " காகம் கடக்கா காவிரி " என்ற சிறப்புடன் 

அலை கடலென பரந்து விரிந்து செல்கிறது. இதன் காரணமாக " அகண்ட காவிரி" என்றழைக்கப்படுகிறது.

 

தொழில்கள்:

    

          காவிரி ஆறு இருப்பதால், விவசாயம் முதன்மைத் தொழிலாகும். வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் சாகுபடி ஆகின்றன. குளித்தலையை ச் சுற்றி உள்ள லாலா ப் பேட்டை, நங்கவரம் மற்றும் இதர ஊர்களில் பயிராகும் வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதி ஆகிறது.

    

          குளித்தலையின் கிழக்கே பெட்டவாய்த்தலையில், சர்க்கரை ஆலை உள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக,இப் பகுதியில், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது.

 

 

கல்வி:-

 

          குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில், ஏராளமான கல்வி நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

அய்யர் மலையில் அமைந்துள்ளது.